லைஃப்ஸ்டைல்
சுஜி முத்திரை

மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு தரும் சுஜி முத்திரை

Published On 2021-10-25 02:34 GMT   |   Update On 2021-10-25 02:34 GMT
சூஜி முத்திரை என்று ஒரு முத்திரை இருக்கிறது. தினமும் இந்த முத்திரையை செய்து வந்தால், குடல் சுத்தமாகும், பல நோய்கள் தீரும். இன்று இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
இரண்டு கைகளையும் புறங்கை உங்கள் பக்கம் இருக்கும்படி நெஞ்சுக்கு நேராக அருகருகே வைக்கவும். விரல்களை மடித்து உள்ளங்கைக்குள் இறுக்கமாக வைக்கவும். கட்டை விரலை நடுவிரல் மீது அழுத்தமாக வைக்கவும் பின் கைகளை அகட்டாமல் உள்ளங்கைகளை மட்டும் எதிரெதிர் திசையில் முடிந்த வரையில் நகர்த்தவும்.

அப்போது மூச்சை உள்ளிழுக்கவும். நகர்த்தியபின் சுட்டு விரலை மட்டும் நீட்டவும். ஆறு முறை மூச்சை நன்றாக இழுத்து விடவும். பின் சுட்டு விரலை மடக்கி பழையநிலைக்கு கொண்டு வரவும். இதே போல் ஆறுமுறை செய்யவும்.

பாதங்களை அருகருகே வைத்தபடி நின்றபடி செய்ய வேண்டும். முடியாதவர்கள் உட்கார்ந்து செய்யலாம் அல்லது சமமாக படுத்தபடி செய்யலாம்.
முத்திரை
கள் செய்யும் போது இடுப்பு முதல் கழுத்து வரை நேராக இருக்க வேண்டும். பாதங்கள் தரையை தொட வேண்டும். சாப்பிடுவதற்கு முன் முத்திரைகள் செய்ய வேண்டும்.

எல்லோரும் இந்த முத்திரை செய்யலாம். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஒருநாளில் காலை, மதியம், மாலை, இரவு என நான்கு முறை மலச்சிக்கல் தீரும் வரை.

Tags:    

Similar News