பெண்கள் உலகம்
ஆதி முத்திரை

நோய் எதிர்ப்பாற்றல் தரும் ஆதி முத்திரை

Published On 2021-10-20 07:59 IST   |   Update On 2021-10-20 07:59:00 IST
இந்த முத்திரை செய்யும் போது உடல் முழுக்க உயிர் ஆற்றல் ஒவ்வொரு செல்களிலும் கிடைப்பதால் நோய் எதிர்ப்பு திறன் முழுமையாக பெறலாம்.
விரிப்பில் கிழக்கு திசை நோக்கி சுகாசனம் அல்லது பத்மாசனத்தில் அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கவனிக்கவும் இருபது விநாடிகள். பின் கட்டை விரலை மடக்கி உள்ளங்கை நடுவில் வைத்து மற்ற நான்கு விரல்களை மூடவும். படத்தை பார்க்கவும். எல்லா விரல்களிலும் சிறிய அழுத்தம் கொடுக்கவும். கண்களை மூடி ஐந்து முறை மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பின் சாதாரண மூச்சில் இருக்கவும். இரண்டு நிமிடங்கள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும்.

பலன்கள்:

உடலில் உயிரோட்டம் நன்றாக இயங்கும்.
நோய் எதிர்ப்பாற்றல் கிடைக்கும்.
ரத்த ஓட்டம், மூச்சோட்டம், வெப்ப ஓட்டம் சமமாக இருக்கும்.
ரத்த அழுத்தம் வராமல் பாதுகாக்கும்.
சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கலாம்.
தன்னம்பிக்கையுடன் வாழலாம்.
சிந்தனை தெளிவு, புத்தி கூர்மை உண்டாகும்.
உடல் முழுக்க உயிர் ஆற்றல் ஒவ்வொரு செல்களிலும் கிடைப்பதால் நோய் எதிர்ப்பு திறன் முழுமையாக பெறலாம்.

Similar News