லைஃப்ஸ்டைல்
மூட்டு முத்திரை

வயதானவர்களுக்கு வரப்பிரசாதம் இந்த முத்திரை

Published On 2021-10-16 04:30 GMT   |   Update On 2021-10-16 04:30 GMT
இந்த முத்திரை வயதானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த முத்திரை பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால் மூட்டுக்களுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
செய்முறை

நமது வலது கை பெருவிரல் நுனியும் மோதிர விரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். அதேபோல் நமது இடது கை பெருவிரல் நுனியும் நடுவிரல் நுனியும் ஒன்றையொன்று தொட்டுக்கொள்ளவேண்டும். இதற்கு மூட்டு முத்திரை அல்லது ஜாயிண்ட் முத்திரை என்று பெயர்.

இந்த முத்திரை பிரித்வி முத்திரை மற்றும் ஆகாஷ் முத்திரைகளின் பலன்களை கொடுக்கிறது.

இந்த முத்திரையை எந்த நிலையிலும் செய்யலாம். உட்கார்ந்து கொண்டோ, நின்றுகொண்டோ, நடந்து கொண்டோ செய்யலாம். இரண்டு கைகளிலும் செய்யவேண்டும். மூச்சுப்பயிற்சி நன்றாக இருக்கவேண்டும். சீரான சுவாசம் அவசியம். குறைந்தது 15 நிமிடங்கள் வீதம் தினமும் 4-5 முறைகள் செய்வது மிக நல்லது. இந்த முத்திரை பயிற்சியை எந்த நேரமும் செய்யலாம்.

மூட்டு முத்திரையினால் ஏற்படும் நல்ல விளைவுகள்

* இந்த முத்திரை நமது மூட்டுக்களில் உள்ள வாதத்தையும் ஈரம் அற்ற தன்மையையும் குறைக்கிறது.
* மூட்டுகளுக்கு அதிக சக்தி கொடுக்கிறது.
* மூட்டுவலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
* இந்த முத்திரை மூட்டுக்களில் உள்ள மஜ்ஜைகள், மற்றும் தசை நார்களில் பாதிப்பு இருந்தால் அதற்கு சக்தி கொடுத்து குணப்படுத்துகிறது.
* இன்று பெரும்பாலும் கம்ப்யூட்டரில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்கிறார்கள். இதனால் நமது முழங்கை, மணிக்கட்டு, விரல்கள், மூட்டுக்கள் விரைப்புத்தன்மை அடைந்து வலியில் அவதிப்படுகிறார்கள். இந்த முத்திரை பயிற்சியினால் அதிக சக்தி மூட்டுக்களுக்கு கிடைக்கிறது. அதனால் வலியிலிருந்து உடனடியாக நிவாரணம் கிடைக்கிறது.
* நாம் அதிக வேலை செய்யும்போதோ அல்லது அதிக தூரம் நடந்து சென்றாலோ ஏற்படும் மூட்டுவலி தசைவலிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
* இந்த முத்திரை வயதானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த முத்திரை பயிற்சியை தொடர்ந்து செய்துவந்தால் மூட்டுக்களுக்கு அதிக சக்தி கிடைக்கும்.
Tags:    

Similar News