லைஃப்ஸ்டைல்
தியானம்

இதயத்தை பாதுகாக்கும், மன அழுத்தம் நீக்கும் எளிய தியானம்

Published On 2021-09-20 02:31 GMT   |   Update On 2021-09-20 02:31 GMT
ஒவ்வொரு மனிதனும் இந்த யோகக் கலைகள் எளிமையான பஞ்சபூத முத்திரைகள், தியானம் தினமும் பயின்று 100 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.
சுகாசனத்தில் நிமிர்ந்து அமரவும். கண்களை மூடி மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக வெளியிடவும். பத்து முறைகள் செய்யவும். பின் உங்கள் மனதை இதயத்தின் உள் பகுதியில் நிலை நிறுத்தவும். நல்ல பிராண ஆற்றல் இதயம் முழுக்க கிடைப்பதாக எண்ணவும். உங்களது உணர்வை இதயம் முழுக்க பரவச் செய்து இதயத் துடிப்பு சீராக இயங்குவதாக எண்ணுங்கள்.

யோக சாஸ்திரப்படி இருதயம் பகுதி அனாகத சக்கரமாகும். இந்தப் பகுதியில் மனதை, மூச்சை கவனித்து தியானிக்கும் பொழுது தைமஸ் சுரப்பி நன்றாக இயங்கும். இதய வால்வுகள், இதய மேலுறை, நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். இதய துடிப்பு சீராகும். உடல் முழுக்க ரத்த ஓட்டம், மூச்சோட்டம், வெப்ப ஓட்டம் சீராகும். மன அழுத்தம், கவலை, டென்ஷன் நீங்கும். மன அமைதி கிடைக்கும். எவ்வளவு வயதானாலும் இதயம் மிக அற்புதமாக இயங்கும். ராஜ உறுப்பான இதயம் நன்றாக இயங்க இந்த எளியமுறை தியானத்தை தினமும் காலை மாலை பத்து நிமிடங்கள் செய்யவும்.

இந்த உடல் ஆரோக்கியத்திற்கு மனம் முக்கிய பங்கு வகிக்கிறது. மனதில் எழும் எண்ணங்களை தீர்க்கமாக ஆராய்ந்து நல்ல எண்ணங்களை மட்டும் செயல்படுத்தவும். என்னால் எதையும் சாதிக்கமுடியும். நான் அற்புத ஆத்ம சக்தி பெற்றவன். எனது ஆரோக்கியம் ஒவ்வொரு கணமும் சிறப்பாக உள்ளது. என் உடல் உறுப்புக்கள் அனைத்தும் நல்ல பிராண சக்தி பெற்று இயங்குகின்றது. இந்த எண்ணம் எப்பொழுதும் நமது மனதில் இருக்க வேண்டும்.

வாழ்வில் ஒரு குறிக்கோள் வேண்டும். அந்த லட்சியத்தை நண்பர்கள், உறவினர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். தன்னலமில்லா தொண்டு சிறிதேனும் தினமும் செய்யுங்கள். இவ்வாறு செய்யும்பொழுது நமது உடலில் சுரப்பிகள் சரியாக சுரக்கும். நம் மனம் அமைதியுறும். உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்.

ஒவ்வொரு மனிதனும் இந்த யோகக் கலைகள் எளிமையான பஞ்சபூத முத்திரைகள், தியானம் தினமும் பயின்று 100 வருடங்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

யோகக் கலைமாமணி பி.கிருஷ்ணன் பாலாஜி M.A.(YOGA)
6369940440
Tags:    

Similar News