பெண்கள் உலகம்
பர்வட்டாசனம்

முதுகு வலி வராமல் தடுக்கும் பர்வட்டாசனம்

Published On 2021-09-17 07:58 IST   |   Update On 2021-09-17 07:58:00 IST
இந்த ஆசனம் செய்வதால் கழுத்துவலி, நடு முதுகுவலி, அடி முதுகு வலி வராமல் வளமாக வாழலாம். முதுகுத்தண்டுவடம் திடப்படும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
பஞ்சபூத முத்திரை முடித்தவுடன் பர்வட்டாசனம் செய்யவும். விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதலில் வலது காலை தொடையில் போட்டு அதன் மேல் இடது காலை வைத்து படத்தில் உள்ளது போல் பத்மாசனம் போடவும்.

இரு கைகளையும் காதோடு சேர்ந்து தலைக்கு மேல் கும்பிடவும். சாதாரண மூச்சில் இருபது வினாடிகள் இருக்கவும். பின் சாதாரண நிலைக்கு வரவும். பத்மாசனம் போட முடியாதவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிடவும். தரையில் சுகாசனத்தில் அமர முடியாதவர்கள் நாற்காலியில் அமர்ந்து கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிடவும். மூன்று முறைகள் செய்யவும்.

பலன்கள்

கழுத்துவலி, நடு முதுகுவலி, அடிமுதுகுவலி வராமல் வளமாக வாழலாம். முதுகுத்தண்டுவடம் திடப்படும். அதைச் சார்ந்த உள் உறுப்புக்கள் நன்கு சக்தி பெற்று இயங்கும். சிறுநீரகம், சிறுங்குடல், பெருங்குடல், இதயம், நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கும். உடலில் பிராண சக்தி எல்லா உறுப்புகளுக்கும் நன்றாக கிடைக்க வழிவகை செய்கின்றது. சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் வாழலாம்.

Similar News