லைஃப்ஸ்டைல்
தியானம்

தியானம் செய்வது எப்படி? அதற்கான ஒழுங்கு முறைகள் என்ன?

Published On 2021-08-12 02:41 GMT   |   Update On 2021-08-12 02:41 GMT
உங்கள் எண்ண ஓட்டத்தைத் தடுக்க வேண்டாம். ஆனால் நீங்கள் உங்கள் எண்ணங்களைக் கவனிக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். நீங்கள் உங்கள் எண்ணத்திலிருந்து வேறுபட்டவர், அதை கவனிப்பவர்.
1. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தியானம் செய்ய அமர்வது நல்லது. அதிகாலை அல்லது மாலையில் இரவும் பகலும் இணைந்திருக்கும் (சந்தியாகாலம் என்று சொல்வர்) நேரம் மிக நல்லது.

2. சத்தமில்லாத, சுற்றிலும் அதிகமான பொருட்கள் இல்லாத, சுத்தமான இடமாய் இருந்தால் நலம். சுற்றிலும் பொருட்கள் நிறைந்திருக்கும் இடத்தில் எண்ண ஓட்டம் குவிவது கடினம். அதே போலத்தான் இரைச்சலான இடங்களும்.

3. உங்கள் விருப்பம் போல வேண்டுமானால் ஒரு வாசனை தரும் ஊதுபத்தியை ஏற்றிக் கொள்ளலாம், ஆனால் கட்டாயமில்லை.

சிம்பிளாக இவை போதும். தியானம் என்பது மூச்சு, எண்ணம், காற்று என்பது போல் யாவருக்கும் பொது, யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

இனி தியானம் செய்யும் முறை:

* மேற்கூறிய ஒழுங்குமுறைகள் கொண்ட இடத்தில் ஒரு விரிப்பை விரித்து முதுகுத்தண்டை முடிந்த வரை நேராக வைத்திருந்து கிழக்கு அல்லது மேற்கு நோக்கி சம்மணமிட்டு அமர்ந்து கொள்ளுங்கள்.

* கண்களை மூடிக் கொண்டிருக்கலாம்.

* உங்கள் மூச்சு வெளிவந்து உட்போவதை கவனித்திருங்கள்.

* உங்கள் எண்ண ஓட்டத்தைத் தடுக்க வேண்டாம். ஆனால் நீங்கள் உங்கள் எண்ணங்களைக் கவனிக்கிறீர்கள் என்பதைப் பாருங்கள். நீங்கள் உங்கள் எண்ணத்திலிருந்து வேறுபட்டவர், அதை கவனிப்பவர். இதைத் தொடருங்கள் சில நேரம்.

* உங்கள் மூச்சு மிக மெல்லியதாக இருப்பதை உணர்வீர்கள். தூக்கம் வந்தாலும் வரலாம்.

* இந்நிலையில் தொடர்ந்து இருங்கள். எப்போது தோன்றுகிறதோ அப்போது கண் விழியுங்கள். விழித்த பின் சிறிது நேரம் அமர்ந்திருங்கள். பின் மெதுவாக எழுந்து கொள்ளலாம்.

இதைத் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் நாளடைவில் அடுத்த கட்டத்திற்கு அதுவே இட்டுச் செல்லும்.

தங்களுக்குப் பிடித்த தெய்வத்தை நினைத்திருப்பது ஒரு வகை, ஆனால் அதிலும் தாங்கள் உங்களுடைய எண்ணத்துடன் சேர்ந்து விடுவீர்கள், இது ஷார்ட் டெர்ம் முறை. அதை விட தங்கள் எண்ணத்தைக் கவனித்திருப்பது லாங் டெர்ம். நாளடைவில் உங்கள் மனமே 'என்ன, ஏதாவது எண்ண வேண்டுமா அல்லது பேசாமலிருப்போமா' என்று கேட்கும், நம்புங்கள்.

Tags:    

Similar News