பெண்கள் உலகம்
பிராணாயாமம்

நுரையீரலைப் பலப்படுத்தும் நாடி சுத்தி பிராணயாமம்

Published On 2021-08-10 08:08 IST   |   Update On 2021-08-10 08:08:00 IST
இந்த பயிற்சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் நுரையீரலில் செயல்திறனை மேம்படுத்தும் மனதை ஒருநிலைப்படுத்த உதவும் இதை எல்லா வயதினரும் செய்யலாம்.
பொதுவாக கோரானா தொற்று அதிகமாக நுரையீரலில் வரும் பொழுதுதான் மூச்சுத் திணறலை உண்டாக்கும் உயிர் இழப்பை உண்டாக்கிவிடும் என்றும் கூறப்படுகிறது

எனவே நுரையீரலைப் பலப்படுத்த வேண்டிய கட்டாய நிலையில் நாம் அனைவருமே உள்ளோம் உண்மையில் நம் முன்னோர்கள் நம் வாழ்வின் ஒவ்வொரு செயலையும் அர்த்தத்துடன் உருவாக்கியுள்ளனர் அதாவது உணவு முதல் உடற்பயிற்சி வரை ஒவ்வொரு செயலையும் பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளனர்

அந்த வகையில் இப்போது நாம் பார்க்கப்போவது நுரையீரலைப் பலப்படுத்த நாடி சுத்தி பிராணயாமம் என்று யோக பயிற்சி பெற்ற பார்க்கப்போகிறோம் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்யும் பொழுது ஆஸ்துமா சைனஸ் முற்றிலும் நீங்கி நுரையீரல் பலப்படும்

அதுமட்டுமல்ல இதயம் பாதுகாக்கப்படும் இதய வால்வுகள் நன்கு இயங்கும் ரத்த அழுத்தம் நீங்கும் இரத்தம் சுத்தமாகும் மூளை நரம்புகளை தூண்டி புத்துணர்ச்சி கிடைக்கும் உடலில் கழிவுகள் சரியாக வெளியேறாமல் தூக்கம் வரும் ஜீரண மண்டலம் நன்கு இயங்கும்

ஒற்றைத் தலைவலி நீங்கும் நோய் எதிர்ப்பாற்றல் பெருகும் அழுத்தம் நீங்கி மன அமைதி கிடைக்கும் அறிவுத்திறன் அதிகரிக்கும் ஞாபகசக்தி பெருகும் முடி கொட்டுதல் இளநரை குறைபாடுகள் நீங்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன இறுக்கம் நீங்கும்

இப்பொழுது பயிற்சிக்கு செல்வம் இந்த மூச்சுப் பயிற்சிக்கு உகந்த நேரம் காலை அல்லது மாலை நேரம் சமமான தரையில் ஒரு விரிப்பு விரித்து அதில் அமர்ந்து முதுகெலும்பு நேராக இருக்கும்படி அமர வேண்டும் வயதானவர்கள் என்றால் நாற்காலியில் அமர்ந்து செய்யலாம் புல்தரை திறந்தவெளி போன்றவை மூச்சுப் பயிற்சிக்கு ஏற்றதாகும்

பயிற்சி செய்பவர்கள் ஒவ்வொருநாளும் வெவ்வேறு நேரங்களில் செய்தல் கூடாது ஒரே நேரத்தில் தான் செய்தல் வேண்டும் முதலில் உங்கள் மூச்சுக் காற்றை நன்றாக வெளியேற்றி விடுங்கள் இப்பொழுது உங்கள் நுரையீரலில் மூச்சுக் காற்று இல்லை இதன் பிறகு வலது கை ஆள்காட்டி விரல் நடுவிரல் இரண்டையும் மடக்கி வைத்து வலது நாசியில் கட்டை விரலும் இடது நாசியில் மோதிர விரலாலும் மூடிக்கொள்ள வேண்டும்

இப்பொழுது இடது பக்க நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வலது பக்க நாசி வழியாக மெதுவாக வெளியே விட வேண்டும் பிறகு வலது பக்க நாசி வழியாக மெதுவாக மூச்சை உள்ளே இழுத்து இடது பக்கம் வெளியே விடவேண்டும் பொதுவாக மூச்சை உள் இழுக்கும் போதும் வெளியே விடும் பொழுதும் மெதுவாக செய்யவேண்டும்.

இதைப் போன்று பத்து முறை செய்யலாம். இந்த பயிற்சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவும் நுரையீரலில் செயல்திறனை மேம்படுத்தும் மனதை ஒருநிலைப்படுத்த உதவும் இதை எல்லா வயதினரும் செய்யலாம்.

Similar News