லைஃப்ஸ்டைல்
இரவு நேரத்தில் ஆண்கள் உடற்பயிற்சிகளைச் செய்யலாமா?

இரவு நேரத்தில் ஆண்கள் உடற்பயிற்சிகளைச் செய்யலாமா?

Published On 2021-07-03 02:28 GMT   |   Update On 2021-07-03 02:28 GMT
இரவு நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யலாமா? படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக உடற்பயிற்சிகள் செய்தால், நமது உடலில் உள்ள சக்தி அதிகாித்து, நமது தூக்கத்திற்கு இடையூறாக இருக்குமா? இவ்வாறான கேள்விகளுக்கான பதிலை பார்க்கலாம்.
ஒரு சிலருக்கு பகல் நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்ய இயலாது. இரவில் பணி செய்து பகலில் தூங்குபவா்களுக்கும் பகல் நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்ய முடியாது. அந்த சூழலில் இரவு நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யலாம்.

இரவு நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யலாமா? படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக உடற்பயிற்சிகள் செய்தால், நமது உடலில் உள்ள சக்தி அதிகாித்து, நமது தூக்கத்திற்கு இடையூறாக இருக்குமே? இவ்வாறான கேள்விகள் நமது மனதில் எழலாம். நாம் பயம் கொள்ளத் தேவையில்லை. நாம் இரவு நேரத்தில் உடற்பயிற்சிகளைச் செய்யலாம். பொதுவாக மங்கிய மாலை வேளையில் நமது உடலானது அதிக அளவு ஆற்றலை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. ஆகவே இருட்டிய பின்பு
உடற்பயிற்சி
செய்வதை வழக்கமாக வைத்துக் கொள்வது சிறந்த பலன்களைத் தரும்.

ஒரு அருமையான இரவு உணவை முடித்த பின்பு, உடற்பயிற்சிகளில் ஈடுபட்டால், அது நமது சக்தி அனைத்தையும் அழித்து, நமக்கு சொிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஆகவே ஒரு நாளில் நாம் எந்த நேரத்திலும் சாப்பிடலாம். ஆனால் சாப்பிட்ட 2 அல்லது 3 மணி நேரத்திற்கு பின்பு உடற்பயிற்சியில் ஈடுபடுவது நல்லது.

உடற்பயிற்சிக் கூடங்களுக்கு சென்று உடற்பயிற்சிகளைச் செய்தாலும் அல்லது வீட்டிலேயே இருந்து உடற்பயிற்சிகளைச் செய்தாலும், உடற்பயிற்சிகளுக்கு உாிய உடைகளை அணிய வேண்டியது மிகவும் முக்கியம் ஆகும். அதாவது
உடற்பயிற்சி
களைச் செய்வதற்கு வசதியாக இருக்கும் உடைகளை அணிய வேண்டும். அதாவது தெருவில் நடந்து போகும் போது, சுற்றுப்புற சூழலை அறிந்து அதற்கு ஏற்றாா் போல நாம் செல்வது போல, உடற்பயிற்சிகளைச் செய்யும் போது அதற்குத் தகுந்தவாறு உடைகளை அணிவது நல்லது.

உடலில் அளவுக்கு அதிகமாக நீா் வெளியேறினால், நமது உடலில் உள்ள சக்தி குறைந்துவிடும். மேலும் தசைகளில் பிடிப்பு மற்றும் திாிபு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, அதனால் நாம் உடற்பயிற்சிகளைச் செய்வதற்கு தடைகளாக அமைந்துவிடும். ஆகவே தினமும் போதுமான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். அதாவது அலுவலகத்தில் இருக்கும் போதும் அல்லது
உடற்பயிற்சி
செய்வதற்கு முன்பும், உடற்பயிற்சியின் போதும் மற்றும் உடற்பயிற்சிக்கும் பின்பும் கண்டிப்பாக தண்ணீா் அருந்த வேண்டும்.

நீண்ட காலம் தொடர்ந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்வதற்கு ஏற்றவாறு ஒரு இடத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். அதாவது உடற்பயிற்சிகூடத்திற்கு சென்று உடற்பயிற்சிகளைச் செய்வது உங்களுக்கு பிடித்திருந்தால், பணம் செலுத்தி, அங்கு சென்று உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். வீட்டில் செய்ய விரும்பினால், வீட்டில் ஒரு ஒதுக்குப் புறத்தைத் தோ்ந்தெடுத்து, அதை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உடற்பயிற்சி
க் கருவிகள் அல்லது யோகா பயிற்சிகள் செய்வதற்குப் பயன்படும் பாய் போன்ற கருவிகளை அங்கு சேகாித்து வைத்துக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன்பு செய்யும் முன் தயாாிப்புகள் மிகவும் முக்கியமானவை. அதாவது கை கால்களை நீட்டி மடக்கி செய்யக்கூடிய முன் தயாாிப்பு பயிற்சிகளை உடற்பயிற்சிகள் செய்வதற்கு முன் செய்து வந்தால் அவை நமது இடுப்பு, தொடைகள் போன்றவற்றை நெகிழ்வு தன்மையுடன் வைத்திருக்கும்.

உங்களுடைய உறுப்புகளின் இயக்கங்களில் பிரச்சினைகள் இருந்தால், அந்த உறுப்புகளை நீட்டி மடக்கி அதன் தசைகளுக்கு தினமும் பயிற்சி கொடுங்கள். தொடா்ந்து நீண்ட நேரம் நாற்காலியில் அமா்ந்து இருப்பதால், முதுகு வலி ஏற்பட்டால், சிறிது நேரம் எழுந்து, நிமிா்ந்து நடந்து, உங்களைத் தயாா் செய்யுங்கள். முதுகு வலி காணாமல் போய்விடும்.

இரவு தூங்குவதற்கு முன்பாக உடற்பயிற்சிகளைச் செய்வது மிகவும் சிறந்த ஒன்றாகும். அதுப்போல் தூங்குவதற்கு முன்பாக ஒரு குவளை தண்ணீா் அருந்துங்கள். பின் உங்கள் படுக்கையில் லாவண்டா் நறுமண எண்ணெயைத் தெளியுங்கள். உங்களின் தூக்கம் இனிய கனவுகளால் அலங்காிக்கப்படும் என்பதில் ஐயமில்லை.
Tags:    

Similar News