பெண்கள் உலகம்
கப நாசக முத்திரை

நாட்பட்ட நோயை குணமாக்கும் முத்திரை

Published On 2021-06-19 07:57 IST   |   Update On 2021-06-19 07:57:00 IST
இந்த முத்திரையை காலை உதயத்திற்கு பின்பும், மாலை அஸ்தமனத்திற்கு முன்புமாக இரண்டு நேரம் செய்வது உத்தமம், அதிக பலன்கள் கிடைக்கும்.
ஆயுர்வேதத்தின் படி ,மூன்று நாடிகளில் பித்த நாடி குறைந்து, கப நாடி கூடினால், சுறுசுறுப்பின்மை, உடல் அதீத குளிர்ச்சி அடைதல், தன்னம்பிக்கை இழத்தல், ஜீரணக் கோளாறு, நீண்ட நேரம் செரிமானம் ஆகாமல் இருத்தல், தாகமின்மை, மாதவிடாய் கோளாறு, தைராய்டு சுரப்பியின் குறைவான செயல்பாடு (ஹைபோ தைராடிசம்),அதிகச் சளித் தொந்தரவு, ஆஸ்துமா, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுதல், கண்நோய்கள், உதாரணமாக கண்களில் அதிக நீர் சுரத்தல், பூளை கட்டுதல் போன்றவை, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை, அதிக எடை, போன்ற நோய்குறிகள் ஏற்படும். இதை போக்குவது இந்த கப நாசக
முத்திரை
.

செய்முறை

சுண்டு விரலை மடக்கவும். மோதிர விரலை சுண்டுவிரலின் பாதி அளவிற்கு மடக்கவும். கட்டைவிரலை மோதிர விரலின் முதல் முட்டியிலும், சுண்டுவிரலின் இரண்டாவது முட்டியிலும் படும்படி அழுத்திப் பிடிக்கவும். இவ்வாறு 30 வினாடிகளிலிருந்து 15 நிமிடம் வரை பயிற்சி செய்தால் மேற்கூறப்பட்ட நோய்கள் நீங்கும்.

இதை எப்போதும் பயிற்சி செய்யலாம். இருப்பினும். காலை உதயத்திற்கு பின்பும், மாலை அஸ்தமனத்திற்கு முன்புமாக இரண்டு நேரம்  செய்வது உத்தமம், அதிக பலன்கள் கிடைக்கும். இது சிகித்சா முத்திரை வகையானதால் நோய் கண்டவர்கள் மட்டும் செய்து நிவர்த்தி ஆனவுடன் நிறுத்திவிடவும். நாட்பட்ட நோய்குணங்கள் உள்ளவர்கள் தொடர்ந்து பயிற்சி செய்தால் நோய் தாக்காது காத்துக்கொள்ளலாம். 

Similar News