பெண்கள் உலகம்
லிங்க முத்திரை

சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தும் முத்திரை

Published On 2021-06-09 07:57 IST   |   Update On 2021-06-09 15:18:00 IST
இந்த முத்திரை பனி காலத்தில் வரும் கபம் மற்றும் சளி போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தவல்லது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை

இரு உள்ளங்கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்துக் கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் தனித்து நேராக நிற்க வேண்டும். வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும்.

பலன்கள்

இந்த முத்திரை ஆண்மையை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதால், அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில், இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். மழை. பனி காலத்தில் வரும் கபம் மற்றும் சளி போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தவல்லது. உடல் எடை குறையும்.

Similar News