பெண்கள் உலகம்
குதபாத ஆசனம்

ஆண்மைக்குறைவை குணமாக்கும் குதபாத ஆசனம்

Published On 2021-05-17 07:42 IST   |   Update On 2021-05-17 09:31:00 IST
இந்த ஆசனம் ஆண்மைக்குறைவு, ஆண்மலடு நீங்க உதவி புரியும். உடல் உஷ்ணம் நீங்கி, மன உளைச்சல்கள் நீங்கும். இந்த ஆசனம் செய்முறையை பார்க்கலாம்.
செய்முறை

விரிப்பின் மீது கால்களை நீட்டியபடி உட்கார்ந்து, பின் இரு பாதங்களையும் உள்பக்கமாக ஒட்டியபடி இணைக்கவும். இரு கைகளாலும் சேர்த்து கால்களை உள்பக்கமாக இழுத்து உடலை உயர்த்தி, கட்டை விரல் தெரிய கால்களில் மேல் சின் முத்திரையிட்டு வைக்கவும்.

ஆசனம் செய்யும் போது நமது சிந்தனையை முதுகுத்தண்டின் மீது செலுத்தவும் காலை, மாலை இரு வேளைகளிலும் செய்யலாம். ஒவ்வொரு தடவையும் 30 விநாடிகள் செய்வது நலம்.

பலன் : ஆண்மைக்குறைவு, ஆண்மலடு நீங்கி பெரிதும் பலனளிக்கும். உடல் உஷ்ணம் நீங்கி, மன உளைச்சல்கள் நீங்கும். யானைக்கால் விரைவில் குணமாகும். பெண்கள் மாதத்தில் 5 நாட்களும், கருவுற்ற காலங்களிலும் செய்யக்கூடாது.

Similar News