லைஃப்ஸ்டைல்
ருத்ர முத்திரை

தாம்பத்தியத்திற்கு உறுதுணை புரியும் ருத்ர முத்திரை

Published On 2021-05-12 02:27 GMT   |   Update On 2021-05-12 02:27 GMT
உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, எதிர்ப்பு சக்தியைத் தரும். சோர்வாக இருக்கும்போது இதை செய்தால் சோர்வு நீங்கி உடனடியாகப் புத்தணர்ச்சி கிட்டும்.
செய்முறை :

தந்த்ரா என்பதில் உள்ள "தந்" உடலிலுள்ள சக்தியையும், "த்ரா", அதைக் கடத்தும் தன்மையையும் குறிக்கும். தாந்திரீகத்தில் நாபி முக்கிய இடம்பெற்றது. சிவ சம்ஹிதையில் நாபிச்சக்கரத்தின் முக்கியத்துவம் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

பெருவிரல், சுட்டு விரல், மோதிர விரலின் நுனியை ஒன்றாகச் சேர்த்து, மற்ற விரல்களை நீட்டியபடி வைக்கவும். இவ்வாறு 20 நிமிடம் இந்த முத்திரையை செய்ய வேண்டும்.

பயன்கள் :

இம்முத்திரை தாம்பத்தியத்திற்கு உறுதுணையாய் இருக்கும். உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்கி, எதிர்ப்பு சக்தியைத் தரும். குறைந்த ரத்த அழுத்தம்,மயக்கம், இதயக் கோளாறுகளை நீக்கும். சோர்வாக இருக்கும்போது இதை செய்தால் சோர்வு நீங்கி உடனடியாகப் புத்தணர்ச்சி கிட்டும்.
Tags:    

Similar News