பெண்கள் உலகம்
வீட்டிலேயே உடற்பயிற்சி

ஊரடங்கு உத்தரவால் கவலையா? வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யலாம் வாங்க

Published On 2021-05-10 07:59 IST   |   Update On 2021-05-10 07:59:00 IST
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், வீட்டிற்கு வெளியே மட்டும்தான் அதை செய்ய முடியும் என்றில்லை, வீட்டில் இருந்தே செய்யலாம்.
கொரோனா 2-வது அலையின் காரணமாக இன்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள், யோகா கூடங்கள் மூடப்பட்டன. இதன் காரணமாக உடற்பயிற்சி செய்பவர்கள் கவலை கொள்ள வேண்டாம். வீட்டிலேயே எளிய முறையில் உடற்பயிற்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்...

உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால், வீட்டிற்கு வெளியே மட்டும்தான் அதை செய்ய முடியும் என்றில்லை, வீட்டில் இருந்தே செய்யலாம். சில ஸ்மார்ட் வழிகளில், உங்கள் அன்றாட வேலைகளை கொழுப்பு உடைக்கும் செயல்களாக மாற்றலாம். ஆமாம், எளிமையான வீட்டு வேலைகள் அல்லது பணிகளைச் செய்வது உங்கள் உடலில் இருக்கும் கலோரி எரிப்பதை இரட்டிப்பாகும். இந்த வழி உங்களுக்கு எடை குறைக்கவும் உதவுகிறது. டிராப்மில்லில் ஓடுவதற்கு 15-20 நிமிடங்கள் சமமாக மாப்பிங், வீட்டை சுத்தம் செய்தல் அல்லது தளபாடங்கள் மறுசீரமைத்தல் போன்ற கடுமையான வேலைகளைச் செய்வது நல்லது என்று ஆய்வுகள் கூறுகின்றன.

சுய கவனிப்பு, தியானம் அல்லது யோகா செய்வதில் நேரத்தை செலவிடுவது எளிதான வழிகளில் ஒன்று. வழக்கமான யோகா பயிற்சி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், உங்கள் மனதை மையப்படுத்தவும், உற்சாகப்படுத்தவும் முடியும். தியானம் சிறப்பாக கவனம் செலுத்த உதவுகிறது மற்றும் எதிர்மறை ஆற்றல்களையும் பதட்டத்தையும் நீக்குகிறது. நல்ல உடற்செயற்பாடுகள் கொண்ட யோகா பயிற்சியை செய்வது நல்லது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். இது மக்களின் அன்றாட வாழ்க்கைமுறையையே மாற்றியுள்ளது. ஜிம்மில் தினமும் உடற்பயிற்சி செய்பவர்கள், பூங்காவில் நடைப்பயிற்சியோ, உடற்பயிற்சியோ செய்பவர்கள் எனப் பலரும் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

பூங்காக்களுக்குச் சென்று நடைப்பயிற்சி செய்ய முடியாத பட்சத்தில் மொட்டை மாடியில் நடைப்பயிற்சி செய்வதும், உடற்பயிற்சி செய்வதும் சரியா என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. இந்தக் கேள்விக்கு சமூக வலைதளங்களில் இவ்வாறான பதில்கள் பரவி வருகின்றன. `மொட்டை மாடியில் உலவக் கூடாது. எல்லோரும் வீட்டுக்குள்ளேயே இருங்கள். மொட்டைமாடிக்குச் சென்று உலவினால் நோய்த் தொற்று ஏற்படக்கூடும்' என்றெல்லாம் கருத்துகள் பரவிவருகின்றன.

மாடிப்படி ஏற முடியாதவர்கள் தவிர்த்து மற்றவர்கள் மொட்டைமாடியில் தாராளமாக நடைப்பயிற்சி, உடற்பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ளலாம். வீட்டிலேயே அடைந்து கிடப்பது போலத் தோன்றுபவர்களுக்கும் மொட்டை மாடியில் நடப்பது புத்துணர்வைத் தரும்.

எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கொரோனா வைரஸ் காற்றில் பரவக்கூடியது அல்ல. வைரஸ் தொற்று உள்ள ஒருவர் மற்றொருவரைத் தொடுவதாலும், அவரது இருமல், எச்சில் போன்றவற்றின் மூலம் வெளியேறும் நீர்த்திவலைகள் மூலமும் மட்டுமே இது பரவுகிறதே தவிர காற்றின்‌ மூலம் பரவாது. எனவே மொட்டை மாடியில் நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யலாம். ஒருவேளை, மொட்டை மாடியில் அதிகமானோர், கூட்டம் கூட்டமாக உடற்பயிற்சி செய்ய வருகிறார்கள் என்றால் மட்டும் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்கலாம். மற்றபடி பிரச்னை எதுவும் இல்லை.

தினமும் ஜாகிங் அல்லது ஜிம்மிற்கு செல்பவர்கள் தற்போது வீட்டிலேயே இருக்க வேண்டிய சூழல் உள்ளது. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சிகளையும் , யோகா போன்றவையும் செய்யலாம். இன்றைய நவீன காலக்கட்டத்தில் வீட்டில் இருந்தபடியே எவ்வாறு ஓர்க்அவுட் செய்யலாம் என்று பல வீடியோக்கள் உங்களுக்கு வழிகாட்டும்.

Similar News