லைஃப்ஸ்டைல்
பத்த கோணாசனம்

நுரையீரலைப் பலப்படுத்தும் பத்த கோணாசனம்

Published On 2021-05-04 02:28 GMT   |   Update On 2021-05-04 02:28 GMT
பத்த கோணாசனம் மூலாதாரம் மற்றும் சுவாதிட்டான சக்கரங்களைத் தூண்டுவதால் நிலையான தன்மையையும் பாதுகாப்பு உணர்வையும் உருவாக்குகிறது.
வடமொழியில் ‘பத்த’ என்றால் ‘பிணைக்கப்பட்ட’ என்றும் ‘கோண’ என்றால் ‘கோணம்’ என்றும் பொருள். இது ஆங்கிலத்தில் Bound Angle Pose, Butterfly Pose மற்றும் Cobbler’s Pose என்றும் அழைக்கப்படுகிறது.

பத்த கோணாசனம் மூலாதாரம் மற்றும் சுவாதிட்டான சக்கரங்களைத் தூண்டுவதால்  நிலையான தன்மையையும் பாதுகாப்பு உணர்வையும் உருவாக்குகிறது. படைப்புத் திறனும் மன உறுதியும் மேம்படுகின்றன. மேலும் இவ்வாசனம் மனதைப் பக்குவப்படுத்துகிறது.

பத்த கோணாசனத்தின் மேலும் சில பலன்கள்

நுரையீரலைப் பலப்படுத்துகிறது. இடுப்புப் பகுதியை விரிக்கிறது. முதுகுத்தண்டை நீட்சியடைய (stretch) வைக்கிறது.

நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. தொடை மற்றும் முட்டியை நீட்சியடைய வைக்கிறது.

செய்முறை

விரிப்பில் அமர்ந்து கொள்ளவும். இரண்டு கால்களையும் மடக்கி பாதங்களை ஒன்றாக சேர்த்து வைக்கவும். இரண்டு கால் விரல்களையும் கைகளால் பற்றவும். கால் முட்டி வெளிப்புறமாக மடங்கி இருக்க வேண்டும்.

மூச்சை உள்ளிழுத்து நேராக அமரவும். 20 நொடிகளுக்கு இந்த நிலையில் இருக்கவும்.

குறிப்பு

இடுப்புக்கும் முட்டிக்கும் வலு சேர்க்கும் ஆசனமாக இருந்தாலும் தீவிரமான இடுப்புப் பிரச்சினை மற்றும் கடுமையான முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்கவும்.
Tags:    

Similar News