லைஃப்ஸ்டைல்
ஜாக்கிங்

பொது வெளியில் ஜாக்கிங் செய்ய தயக்கமா?

Published On 2021-04-21 02:23 GMT   |   Update On 2021-04-21 02:23 GMT
பொது வெளியில் பயிற்சி மேற்கொள்ள கூச்சம் காரணமாக பெண்களின் பலரும் முன் வருவதில்லை. தயக்கம் தவிர்த்து நம்பிக்கையோடு ஜாக்கிங் செய்ய கீழ்கண்ட ஆலோசனைகள் உதவும்.
உடற்பயிற்சியின் அவசியம் குறித்த விழப்புணர்வு தற்போது பெண்களிடையே அதிகரித்து வருகிறது. உடல் நலனுக்கு ஏற்ற பயிற்சிகளில் மெல்லோட்டம் என்ற ஜாக்கிங் முக்கியமானது. சரியான உடல் எடை, இதயநலம், எலும்புகளின் வலிமை, சீரான ரத்த ஓட்டம், மன வலிமை போன்ற நலன்களை ஜாக்கிங் செய்து பெறலாம்.

பொது வெளியில் பயிற்சி மேற்கொள்ள கூச்சம் காரணமாக பெண்களின் பலரும் முன் வருவதில்லை. தயக்கம் தவிர்த்து நம்பிக்கையோடு ஜாக்கிங் செய்ய கீழ்கண்ட ஆலோசனைகள் உதவும்.

சேலை மற்றும் சுடிதார் அணிந்து ஜாக்கிங் செய்வதை விட பொருத்தமான பயிற்சி உடைகளை அணிவது தான் நல்லது. தரமான பஞ்சு நூலால் தயாரிக்கப்பட்ட ஜாக்கிங் ஆடைகள் கோடையில் வியர்வையை உறிஞ்சும் வகையிலும், குளிர் காலத்தில் உடலை கதகதப்பாக பராமரிக்கவும் உதவும்.

ஜாக்கிங் செய்ய உதவியாக பொருத்தமான உள்ளாடைகள் அணிவது முக்கியம். தரமான ஷூ வகைகளை பயன்படுத்த வேண்டும். அவற்றை அணிவது நம்பிக்கை தருவது மட்டுமல்லாமல் ஓடும் போது காலில் காயங்கள் ஏற்படாமலும் பாதுகாக்கும்.

மற்றவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற தயக்கம் ஒருபோதும் முன்னேற விடாது. எனவே மற்றவரின் பேச்சுக்கள் கேலிப்பார்வைகள் எதையும் பொருட்படுத்தாமல் பயிற்சியை தொடர்ச்சியமாக செய்து வர வேண்டும். தோழிகள் அல்லது முன்னதாக அறிமுகம் ஆனவர்களுடன் சேர்த்து ஜாக்கிங் செய்தால் ஒருவருக்கொருவர் ஊக்கம் அளித்து கொண்டு தொடர் பயிற்சியில் ஈடுபட முடியும். ஜாக்கிங் குழுக்களுடன் சேர்ந்தும் பயிற்சியை உற்சாகமாக செய்யலாம்.

காலை நேர ஜாக்கிங் என்பது மிக நல்லது. மற்ற பணிகளை காரணம் காட்டி  காலை நேர பயிற்சியை தள்ளிப்போடுவது கூடாது. வழக்கமாக கண் விழிக்கும் நேரத்தை விட அரை மணிநேரம் முன்னதாக எழுந்து பயிற்சி செய்யும் வழக்கத்தை கடைப்பிடிக்கலாம்.

மேல் மாடியில் ஓடுவது, டிரெட் மில் பயிற்சி ஆகியவற்றை விட இயற்கை வெளிகளில் ஜாக்கிங் செய்வது தான் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வை அளிக்கும். எனவே நமக்கு தடையாக இருக்கும் அனைத்தையும் கடந்து, மன உறுதியோடு பயிற்சியில் ஈடுபட்டால் ஆரோக்கியமாக வாழலாம்.
Tags:    

Similar News