லைஃப்ஸ்டைல்
பத்மாசனம்

முதுகுத்தண்டை வலுவாக்கும், தொப்பையை குறைக்கும் ஆசனம்

Published On 2021-04-19 02:30 GMT   |   Update On 2021-04-19 02:30 GMT
பத்மா என்றால் தாமரை என்று பொருள். இந்த ஆசனம் செய்யப்படும்போது தாமரை பூ போல தோற்றம் கிடைக்கும் ஆகவே இந்த பெயர். பிராணாயாமம், ஜபம், தியானம் செய்வதற்கு மிகவும் உயரந்த ஆசனம்.
செய்முறை

பத்மாசனம் செய்யும் முன் தரையில் நேராக அமர்ந்து இரண்டு கால்களை நேராக முதலில் நீட்டிகொளவும். வலது காலைமடக்கி இடது தொடையின் மேலும், இடது காலைமடக்கி வலது தொடையின் மேல் வைத்து படத்தில் உள்ளவாறு வைத்துக்கொள்ள வேண்டும். எந்த கால்களை வேண்டுமானாலும் முதலில் மடக்கிவைக்கலாம். பத்மாசனத்தில் அமர்ந்த பின்பு உடல் நேராகவும் பார்வை நேராகவும் இருக்கவேண்டும். உடலை இறுக்கி பிடித்தவாறு இருத்தல் கூடாது. உள்ளங்கை மேல்நோக்கி இருக்க வேன்டும் ஆள்காட்டி விரல் கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்(சின்முத்ரா). நேராக அமர்ந்து சுவாசம்( மூச்சு ) மெதுவாக விடவேண்டும்.
நேர அளவு

முதலில் 1-5 நிமிடங்கள் வரை செய்யலாம். பழகின பிறகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

பயன்கள்

வயிற்றின் இரத்த ஓட்டம் சரிப்படுத்தப்படுகிறது. ஞாபகசக்தி அதிகமாகும். முதுகுத்தண்டு வலுப்படும். தொப்பை குறையும். பிராணாயாமம், ஜபம், தியானம் செய்வதற்கு மிகவும் உயரந்த ஆசனம். நரம்புகளுக்கு நல்லது. மனோசக்தி கூடுகிறது.
Tags:    

Similar News