லைஃப்ஸ்டைல்
வஜ்ராசனம்

இரவில் தூக்கம் வராமல் சிரமப்பட்டால் இந்த ஆசனங்களை செய்யயலாம்

Published On 2021-04-09 02:21 GMT   |   Update On 2021-04-09 02:21 GMT
நீங்கள் இரவில் தூங்குவதற்கு சிரமப்பட்டாலோ அல்லது ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ, நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில யோக ஆசனங்கள் இங்கே உள்ளது.
மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை பலரது ஆரோக்கியத்தை பாதிக்கிறது. பலர் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கிறார்கள். ஆனால், நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க தூக்கம் அவசியம். நீங்கள் இரவில் தூங்குவதற்கு சிரமப்பட்டாலோ அல்லது ஏழு மணி நேரத்திற்கும் குறைவாக தூங்கினாலோ, நீங்கள் முயற்சி செய்யக்கூடிய சில யோக ஆசனங்கள் இங்கே உள்ளது.

ஒவ்வொரு போஸையும் 30 வினாடிகள் முதல் 1 நிமிடம் அல்லது அதற்கு மேல் வைத்திருக்கலாம். இதனை மூன்று முறை மீண்டும் செய்யவும். பின்னர் படிப்படியாக 10-15 நிமிடங்களுக்கு அதிகரிக்கவும்.

1. சுகாசனம் (ஹேப்பி போஸ்):

– தரையில் நேராக அமர்ந்து கொள்ளுங்கள்

– உங்களின் இரு கால்களையும் நீட்டவும்

– உங்கள் கால்களை ஒன்றன்மேல் ஒன்றாகக் வைக்கவும்

– உங்கள் உள்ளங்கைகளை முழங்கால்களில் வைக்கவும்

– முதுகெலும்பை நேராக வைத்து நிமிர்ந்து உட்கார்ந்து கொள்ளுங்கள்

2. வஜ்ராசனம்:

இந்த ஆசனத்தை உணவிற்கு பிறகு செய்யலாம்.

– உங்கள் முழங்கால்களை மடக்கி மெதுவாக அதன் மீது உட்காரவும்.

– உங்கள் இடுப்பை உங்கள் குதிகால் மீது வைக்கவும்

– உங்கள் குதிகால் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்

– முழங்கால் முட்டிகள் மீது உங்கள் உள்ளங்கைகளை வைக்கவும்

– உங்கள் முதுகை நேராக்கி உட்காருங்கள்

3. தியானம்:

– இந்த நுட்பத்தை பயிற்சி செய்ய இயற்கை சூழலைக் கண்டறியவும்

– சுகாசனம் போன்ற வசதியான தோரணையில் உட்கார்ந்து கொள்ளுங்கள்

– 5 விநாடிகளுக்கு முன்புறத்தையும், மற்றொரு 5 விநாடிகளுக்கு பின்புறத்தையும், வலது மற்றும் இடது பக்கங்களில் தலா 5 விநாடிகளும் பாருங்கள்

– கண்களை மூடிக்கொண்டு உங்களால் முடிந்தவரை ஏற்கனவே நடந்த விஷயங்களை நினைவு கூருங்கள்

இந்த யோகாசனம் பல நன்மைகளைக் கொண்டுள்ளன. இது உங்களிடம் அமைதியான உணர்வைத் தூண்டக்கூடும். இது ஒரு நல்ல இரவு ஓய்வை அனுபவிக்க உதவுகிறது. உடலுக்கான உணவைப் போலவே, உடல் அதன் உகந்த நிலையில் செயல்பட தூக்கம் தேவைப்படுகிறது. தூக்கம் குறைவான மன அழுத்த அளவையும், அமைதியான மனதையும், நல்ல ஆரோக்கியத்தையும் எளிதாக்குகிறது
Tags:    

Similar News