லைஃப்ஸ்டைல்
முதலை இருக்கை (மகராசனம்)

மாதவிடாய் கோளாறுகளை நீக்கும் ஆசனம்

Published On 2021-04-08 02:21 GMT   |   Update On 2021-04-08 02:21 GMT
முதலை இருக்கை (மகராசனம்) ஆசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும். சர்க்கரை நோய், மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவற்றிற்கு உகந்த இருக்கை இது.
முதலில் தரை விரிப்பின் மேல் குப்புறப்படுத்து கால்களை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ளவும். நெற்றி (முகம்) தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். கைகளை தலைக்கு மேல் நீட்டி தரையை தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

கால்களை நன்கு நீட்டிக் கொள்ளவும். மூச்சை உள்ளிழுத்து கொண்டே கைகளையும், கால்களையும் தரையிலிருந்து தூக்கவும். அவை நீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். வயிற்றுப்பகுதியே உடலின் எடையை தாங்கும்.

இந்த கைகள், கால்கள் தூக்கிய நிலையில் மூன்று தொடக்கம் ஐந்து முறை ஆழமான மூச்சினை சுவாசித்ததன் பின் மூச்சினை வெளிவிட்டவாறு மீண்டும் தரையை நோக்கி மெதுவாக தொடக்க நிலைக்கு வந்து ஐந்து மூச்சுகள் ஒய்வு எடுத்ததின் பின் மீண்டும் செய்யலாம். இவ்வாறு இந்த ஆசனத்தை 3 முதல் 5 முறை செய்யவும்.

படத்தில் காட்டப்பட்ட முறைகளில் உங்கள் உடல்வாகுக்கு ஏற்ற பல்வேறு இலகு நிலைகளிலும் செய்யலாம்.

இதில் பல்வேறு நிலைகள் பல்வேறு பெயர்களில் இருக்கின்றன.

பலன்கள்:

சுரப்பிகள் சரிவர இயங்கும். கால், வயிறு, இடுப்பு போன்றவை பலம் பெறும்.

ஊளைச்சதை குறையும்.

உடல் முழுவதும் இரத்த ஒட்டம் சீராக அமையும்.

 பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

சர்க்கரை நோய், மலச்சிக்கல், வயிற்று வலி போன்றவற்றிற்கு உகந்த இருக்கை இது.
Tags:    

Similar News