லைஃப்ஸ்டைல்
உடலை சுத்தப்படுத்தும் முத்திரை

உடலை சுத்தப்படுத்தும் முத்திரை

Published On 2020-02-25 03:01 GMT   |   Update On 2020-02-25 03:01 GMT
இந்த முத்திரையே நமது வயிறு, குடல் பகுதியைச் சுத்தமடையச் செய்கின்றது. உடல், மனசுத்தம் வந்தால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நேர்மையான எண்ணங்களே எப்பொழுதும் உதயமாகும்.
பலவகையான முத்திரைகளில் சுத்தப்படுத்தும் முத்திரை என்று ஒன்று உள்ளது. நமது உடலில் உள்ள குறிப்பாக வயிறு, குடல் பகுதிகள்தான் நம் உடலுக்கு குப்பைத் தொட்டியாகும். கிடைத்ததையெல்லாம் உண்கிறோம், அவை அனைத்தும் நமது சிறுகுடல், பெருங்குடலில் அசுத்தத்தை உண்டு பண்ணுகிறது. அதனை முதலில் சுத்தம் செய்யும் வழியைத் தெரிந்தால் உடல், மனம் சுத்தமாகும். பின் நம் நாட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.

சுத்தப்படுத்தும் முத்திரை செய்வது எப்படி?

தரையில் விரிப்பு விரித்து கிழக்கு முகமாக பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமரவும். உங்கள் முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். கண்களை மூடி ஒரு நிமிடம் இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை உள் இழுத்து இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை வெளியிட வேண்டும்.
பின் கட்டை விரலால் மோதிர விரலின் மூன்றாவது அங்குலாஸ்தியை: அதாவது மூன்றாவது கீழ்ப்பகுதியை மெதுவாத் தொட வேண்டும். அதில் சிறிதளவு அழுத்தம் கொடுக்கவும். ஒரே சமயத்தில் இரண்டு கைகளிலும் செய்ய வேண்டும். (படத்தைப் பார்க்க)

எவ்வளவு நேரம் செய்யலாம்: முதலில் 5 நிமிடங்கள் செய்லாம். காலை, மாலை இரு வேளையும் செய்யலாம். ஒரு நாளில் காலை, மதியம், மாலை, மூன்று வேளையும் 15 நிமிடங்கள் செய்தால் மிகுந்த பலன் கிடைக்கும். விரிப்பில் அமர்ந்தும் செய்யலாம். நாற்காலியில் உட்கார்ந்தும் (நிமிர்ந்து அமரலும்) செய்யலாம். நீங்கள் நின்ற நிலையிலும் இதனைச் செய்யலாம். கிடைக்கின்ற நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நம் உடலில் உள்ள கழிவுகள் சரியாக வெளியேறி விடும்

நாம் உண்ணும் உணவில் உள்ள நச்சுப் பொருட்கள் உடலின் உட்புற உறுப்புக்களில் தங்கி விடுகின்றது. இவைகள் அப்புறப்படுத்தாததால் மனிதனுக்கு பல வகையான வியாதிகள் வருகின்றது.
 
இந்த சுத்தப்படுத்தப்டும் முத்திரை செய்யும் பொழுது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சிறுநீரகம், மலம் மூலமாகவும், வியர்வையாகவும் வெளியேறுகின்றது.

மோதிர விரல் - நிலம், கட்டை விரல் - நெருப்பு (நிலமும்+நெருப்பும்) இரண்டும் சேரும் பொழுது நமது உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் வெளியேறுகின்றது.

வயிற்றுக் பகுதி சுத்தமடையும்: வயிற்று உள் பகுதியில் உள்ள கழிவுப் பொருட்கள் சுத்தமடைவதால் குடலும் சுத்தமடைகின்றன. பொதுவாக தனூராசனம், பாதஹஸ்த ஆசனம், சலபாசனம் போன்ற கடினமான ஆசனங்களையெல்லாம் செய்ய முடியாது. எனவே இந்த எளிய முத்திரையை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த முத்திரையே நமது வயிறு, குடல் பகுதியைச் சுத்தமடையச் செய்கின்றது. உடல், மனசுத்தம் வந்தால் எதிர்மறை எண்ணங்கள் நீங்கும். நேர்மையான எண்ணங்களே எப்பொழுதும் உதயமாகும்.
Tags:    

Similar News