லைஃப்ஸ்டைல்
ஆனந்தாசனம்

ஆனந்தமளிக்கும் ஆனந்தாசனம்

Published On 2020-02-21 03:09 GMT   |   Update On 2020-02-21 03:09 GMT
எண்ணற்ற யோகாசனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆசனத்திற்கும் ஒரு பெயருண்டு. அந்த பெயருக்கு ஏற்ற பலனும் உண்டு. அந்த வகையில் ஆனந்தாசனம் என்ற ஒரு ஆசனத்தையும், அதன் மகிமையை பற்றியும் காண்போம்.
உடலில் உள்ள இரு நாசித்துவாரமும் அடைப்பு இல்லாமல் சுவாசம் சீராக அதன் வழி இயங்கினால் நமது உடல் உள்உறுப்புகள் அனைத்தும் நல்ல பிராண சக்தி பெற்று சிறப்பாக இயங்கும். அந்த வகையில் நம் உடல் உள் உறுப்புக்களுக்கும், குறிப்பாக மூளைக்கும் நல்ல பிராண சக்தி கிடைத்தால் உடலும், மனமும் ஆனந்தமாக இருக்கும். அதனால் தான் இது ஆனந்தாசனம் என்று அழைக்கப்படுகின்றது.

செய்முறை

* தரையில் விரிப்பு விரித்து முதலில் நேராகப்படுக்கவும்.
* இடது பக்கம் திரும்பவும்.
* இடது கையை இடது கன்னத்தில் வைத்து முட்டியை தரையில் வைத்து தலை யை உயர்த்தவும்.
* வலது காலை நன்றாக மேலே உயர்த் தவும்.
* வலது கையினால் வலது கால் பெரு விரலைப்பிடிக்கவும்.
* தலையும், கண்களும் இடது பக்கம் பார்த்தாற்போல் இருக்கவும்.
* பின் மெதுவாக காலை கீழே வைத்து கையை எடுத்து நேராகப் படுக்கவும்.
* இதேபோல் கால் மாற்றி வலது பக்கம் திரும்பி இடது காலை உயர்த்தி இடது கையினால் இடது கால் பிடித்து ஒரு முறை செய்யவும்.

நாசி அடைப்பை விரைவில் சரி செய்யும்


உங்களுக்கு வலது நாசி அடைப்பு இருந்தால் இடது பக்கம் திரும்பி ஒரு நிமிடம் இந்த ஆசனத்தை செய்து பாருங்கள். உடன் வலது நாசி அடைப்பு சரியாகிவிடும். இடது நாசியில் அடைப்பு இருந்தால் வலது பக்கம் திரும்பி ஒரு நிமிடம் இந்த ஆசனத்தை பயிற்சி செய்யுங்கள், உடன் இடது நாசி அடைப்பு நீங்குவதைக் கண்டு மகிழலாம்.



இரண்டு நாசிகளும் அடைப்பிருந்தால் வலப்பக்கம், இடப்பக்கம் இரு புறமும் ஒரு நிமிடம் செய்யுங்கள். உடனே நாசி அடைப்பு நீங்கிவிடும். மூக்கடைப்பினால் தான் எல்லா வியாதியும் வருகின்றது. இதை நிறைய பேர்ர் அலட்சியம் செய்கின்றனர். இதன் விளைவு நுரையீரல் பாதிப்பு, இருதயம் பாதிப்பு வரை செல்கிறது. உடலில் வலப்பகுதி உறுப்புக்களை இடது நாசி மூச்சுதான் ஆளுமை புரிகின்றது. மனிதனுக்கு இரு நாசிகளும் சரியாக இயங்கினால் உடலியக்கம் முழுவதும் நன்றாக இருக்கும். மனதின் இயக்கமும் நன்றாகயிருக்கும். உடலும், மனமும் நலமானால் வாழ்க்கை முழுவதும் ஆனந்தம் தானே!

சாப்பிடாமல் பலநாள் இருக்கலாம். தண்ணீர் குடிக்காமல் சில நாட்கள் இருக்கலாம். ஆனால் உடலில் மூச்சு இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க முடியாது. அப்படிப்பட்ட மூச்சை சிறப்பாக இரு நாசித் துவாரத்தின் வழியே சரியாக அடைப்பு இல்லாமல் இயங்கச் செய்வது தான் சிறந்த வாழ்க்கை. அது இந்த ஆனந்தாசனம் பயில்வதினால் சாத்தியமாகும். எனவே வாழ்வில் ஆனந்தத்தை தேடுபவர்கள் அனைவரும் இந்த ஆசனத்தை அவசியம் பழகுங்கள்.

இவ்வாசனத்தின் இதர பலன்கள்

* மனித உடலின் இயக்கத்திற்கு முழு ஆதாரமான மூச்சோட்டத்தை வலது, இடது நாசியில் அடைப்பு இல்லாமல் சரியாக இயங்கச் செய்கிறது.
* உடலின் எல்லா உறுப்புக்களுக்கும் பிராண சக்தி கிடைக்கின்றது.
* இடுப்பு சதைகள் இறுக்கமாகின்றது. அதிக தசை குறைந்து கட்டுக்கோப்பாக அழகாக இருக்கச் செய்ய உதவுகின்றது.
* மூலத்திற்கு குணமளிக்கும். மலச்சிக்கல் நீங்கும்.
* நுரையீரல், இருதயம் பலம் பெறுகின்றது.
* நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
* ஆண், பெண் பிறப்புறுப்புக்களில் ரத்த ஓட்டம் நன்கு பாய்கின்றது.அரிப்புகள் நீங்கும்.
* பெண்கள் இளமைப் பருவத்திலேயே பயிற்சி செய்தால் சுகப்பிரசவம் உண்டாகும். என்றும் இளமையுடன் இருக்கலாம்.
* கழுத்து வலி நீங்கும்.
Tags:    

Similar News