பெண்கள் உலகம்

ஆண்மை அதிகரிக்கும் அஸ்வினி முத்திரை

Published On 2019-01-01 09:20 IST   |   Update On 2019-01-01 09:20:00 IST
இந்த முத்திரையை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல் பலம் பெரும். ஆண்மையை பெருக்க வழி என்ன என்று புலம்புபவர்களுக்கு இதை விட சிறந்த வழி வேறு இல்லை.
அஸ்வினி முத்திரையை தொடர்ந்து செய்து வந்தால் மிக ஆரோக்கியமாக இருக்கலாம். ஆண்கள் பெண்கள் இருபாலரும் செய்யலாம். இதை செய்தால் ஆண்மை அதிகரிக்கும். உடல் பலம் பெரும். இளமை நம்மிடமே தங்கும். ஆண்மையை பெருக்க வழி என்ன என்று புலம்புபவர்களுக்கு இதை விட சிறந்த வழி வேறு இல்லை.

உடலில் உள்ள முக்கிய நரம்புகள் எல்லாம் ஆசன வாயில்(சுருங்கும் இடத்தில) வந்து குவிகின்றன. அதை சுருக்கி விரிக்கும்போது அவை தூண்டப்பட்டு உடல் சக்தி பெறுகிறது. இந்த முத்திரை செய்வதால் மலச்சிக்கல், மூலம், பவுத்திரம், ஆசன வாயில் வெடிப்பு போன்ற பிரச்சனைகள் தீரும். ஆசனவாய்த் தசையும் வலுவடையும். பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும்.

செய்முறை :

விரிப்பில் தியானம் செய்வது போல் அல்லது பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் வசதியாக அமர்ந்து கொண்டு குதம் வெளியேறும் பகுதியை மெதுவாகச் சுருக்கி இழுத்துப் பிடிக்க வேண்டும். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம். இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும்.

Tags:    

Similar News