பெண்கள் உலகம்

அடிவயிறு, பிறப்பு உறுப்புகளுக்குச் சக்தி தரும் உஜாஸ் முத்திரை

Published On 2018-12-20 08:33 IST   |   Update On 2018-12-20 08:33:00 IST
இந்த முத்திரை அடிவயிறு, பிறப்பு உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கிறது. அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும். கர்ப்பப்பை, சினைப்பை, முட்டை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
உஜாஸ் என்றால் விடியல் அல்லது புதிய தொடக்கம் என்று அர்த்தம்.

செய்முறை :

விரிப்பில் சப்பணம் இட்டு அமர்ந்த வாறோ, கால்களைத் தரையில் நன்கு பதித்தபடி நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம். கைகள் உடலைத் தொடக் கூடாது. தொப்புளுக்குக் கீழே அடிவயிற்றுப் பகுதியில் வைத்து, இரு கை விரல்களையும் கோத்துக் கொள்ள வேண்டும்.

தினமும் காலை, மாலை இரு வேளையும் 15-20 நிமிடங்கள் வரை செய்யலாம்.

பலன்கள் :

அடிவயிறு மற்றும் பிறப்பு உறுப்புகளுக்குச் சக்தி அளிக்கிறது. அடிவயிற்றில் உள்ள அனைத்து உறுப்புகளும் வலுப்பெறும்.

கர்ப்பப்பை, சினைப்பை, முட்டை ஆகியவற்றின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்துக்கும் உதவும். ஆண்களின் வீரிய விருத்திக்கு உதவி செய்வதுடன், விந்தணுக்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.

ஹார்மோன் குறைபாடுகளைச் சரிசெய்யும்.
Tags:    

Similar News