லைஃப்ஸ்டைல்

உடல் சோர்வினை நீக்கும் பிரித்திவி முத்திரை

Published On 2018-12-07 03:13 GMT   |   Update On 2018-12-07 03:13 GMT
இந்த முத்திரை எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும், உடல் பலவீனமானவர்களுக்கு நிறையைக் கூட்டும். ஜீரண சக்தியை கூட்டுகிறது. இந்த முத்திரை செய்முறையை பார்க்கலாம்.
உடலில் நிலம் (பூமியை) எனும் பஞ்சபூத சக்தியை அதிகரிக்கும் முத்திரையாகும்

செய்முறை :

மோதிரவிரல் நுனியால் பெருவிரல் நுனியை அழுத்தமாகத் தொட்டு ஏனைய மூன்று விரல்களையும் வளையாது நிமிர்த்தி பிடிக்கவும்.

தரையில் துண்டு அல்லது பெட்ஷீட் விரித்து, அதன் மேல் சப்பளங்கால் போட்டு அமர்ந்தோ, தரையில் பாதங்களைப் பதித்தபடி, நாற்காலியில் அமர்ந்தோ செய்யலாம்.

காலை, மாலை என வெறும் வயிற்றில், முறையே 20 நிமிடங்கள் செய்யலாம் அல்லது 10 நிமிடங்களுக்கு நான்கு வேளை செய்யலாம். 12 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இதைச் செய்ய வேண்டாம்.

ஆரோக்கியமாக இருக்கும், 10-20 வயது வரையுள்ள ஆண்கள், இந்த முத்திரை செய்வதைத் தவிர்க்கலாம். வளர்ச்சிக் குறைபாடு உள்ளவர்கள் செய்யலாம்.

பலன்கள் :

எந்தவித உடல் சோர்வினையும் நீக்கும், உடல் பலவீனமானவர்களுக்கு நிறையைக் கூட்டும், தோலினை பளபளப்பாக வைத்திருக்க உதவுவதோடு அழகிய தோற்றத்தையும் தருகிறது, ஜீரண சக்தியை கூட்டுகிறது.

பிருத்வி முத்ராவை தொடர்ந்து தினமும் செய்யும்போது உடலில் உள்ள திசுக்கள் பலம் பெறுகிறது.

எலும்புகள், குருத்தெலும்புகள் வலுப்பெறுகிறது. தசை, தோல், சதைப்பற்றுகள் முத்ரா பயிற்சியின் மூலம் பலனடைகிறது.

அல்சர், உடல் எரிச்சல் போன்றவற்றுக்கு இந்த ப்ருத்வி முத்திரை மூலம் தீர்வு கிடைக்கிகிறது

மஞ்சள் காமாலை, காய்ச்சல் மற்றும் தைராய்டு பிரச்சினைகளிலிருந்து எளிதாக வெளியே வர பிருத்வி முத்ரா உதவுகிறது

நீண்டநாள் சோர்வுக்கு காரணமான சதைப் பற்றுகளை வலிமையாக்குகிறது. தொடர் பயிற்சி மூலம் உடல் உறுதியை மீளப் பெற முடியும்

சிறந்த சிகிச்சைக்கான குணாம்சங்களைக் கொண்ட முத்ரா, பாயும் படுக்கையுமாக கிடந்தவர்களை நடக்க வைத்துவிடும்

பிருத்வி முத்ராவை நாள்தோறும் 30 அல்லது 40 நிமிடங்கள் செய்து பாருங்கள். அதன் நன்மை நம் கண்களுக்கு புலப்படும்.
Tags:    

Similar News