லைஃப்ஸ்டைல்

முதுகு வலியை கட்டுப்படுத்தும் பரத்வாஜாசனம்

Published On 2017-08-31 05:54 GMT   |   Update On 2017-08-31 05:54 GMT
உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு வரும் முகுது வலியை கட்டுப்படுத்தும் இந்த ஆசனம். இன்று இந்த ஆசனத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
விரிப்பில் கால்களை முன்னே நீட்டிக் கொண்டு, நேராக நிமிர்ந்து உட்காரவும். கால்கள் சேர்ந்து இருக்கட்டும். கால்களை மடக்கி அதன் மேல் உட்காரவும். வலது காலை இடது காலை கீழ் வைக்கவும், கைகளை தளர்த்திக் கொள்ளவும். இடது கையை வலது முழங்காலில் வைக்கவும். வலது கையை உங்கள் உடலின் பக்கத்தில் முதுகெலும்பின் அருகாமையில் வைக்கவும்.

மூச்சை உள்ளே இழுக்கவும். முதுகெலும்பை மேலே நீட்டி கொள்ளவும். மூச்சை வெளி விடவும். இடுப்புக்கு மேல் உள்ள உடலின் பாகத்தை வலது பக்கம் திருப்பவும். நன்றாக இடது தோள் வலது தோளின் நேர் கோட்டில் இருக்குமாறு திருப்பவும்.

இடது கைகளை நேராக வைத்துக் கொண்டு வலது கையால் இடது முழங்கையை பிடித்துக் கொள்ளவும். தலையை திருப்பி வலது தோள் மேல் பார்வை செல்லும் படி வைத்துக் கொள்ளவும். இந்த நிலையில் நார்மாலாக சுவாசிக்கவும். மூச்சை உள் இழுக்கும் போது உஙகள் உடலை, மார்பை விரித்து மேலே தூக்கவும். மூச்சை வெளியே விடும் போது உடலை (இடுப்புக்கு மேல்) திருப்பவும்.

மூச்சை உள் இழுக்கவும். உடலை நார்மல் நிலைக்கு திருப்பவும். கைகளை தளர்த்தி கொள்ளவும். மூச்சை வெளியே விட்டு கால்களை உடலுக்கு முன் நீட்டிக் கொள்ளவும். இந்த ஆசனத்தை மறுப்பக்கம் திருப்பிச் செய்யவும்.

பயன்கள் :

முதுகெலும்பை சீராக வளையும் படி செய்கிறது. முதுகெலும்புக்கு வலுமையூட்டுகிறது.

முதுகு வலியை கட்டுப்படுத்துகிறது.

முதுகெலும்பின் ஆர்த்தரைடீஸை கட்டுப்படுத்துகிறது.
Tags:    

Similar News