லைஃப்ஸ்டைல்
குழந்தையின் சோகம்

அதிகரிக்கும் குழந்தைகள் தற்கொலை

Published On 2021-08-13 03:26 GMT   |   Update On 2021-08-13 03:26 GMT
பள்ளி பாடத்திட்டத்தில் வாழ்க்கைத் திறன் பயிற்சியை சேர்ப்பது, மனநலக் கல்வியை முதன்மைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் குழந்தைகள் மனதில் எழும் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கலாம்.
மூன்று ஆண்டுக்குள் (2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை) 24 ஆயிரம் குழந்தைகள் தற்கொலை செய்திருக்கிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டிருக்கிறது. அவர்கள் அனைவரும் 14 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள்.

தேர்வுகளில் தோல்வி, திருமண அழுத்தம், வறுமை, வேலையின்மை, உடல் உபாதை, போதைப்பொருள் துஷ்பிரயோகம், சமூகத்தில் நற்பெயர் வீழ்ச்சி, தேவையற்ற கர்ப்பம் போன்ற காரணங்கள் தற்கொலைக்கான பின்னணியில் உள்ளன. நன்றாக படித்தாக வேண்டும் என்று குழந்தைகள் மீது திணிக்கப்படும் அழுத்தம்தான் அதிக உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கிறது. கல்வி மீதான அழுத்தம் காரணமாக 4,046
குழந்தை
கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். குறிப்பாக தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இறந்திருக்கிறார்கள். குழந்தை பருவ திருமண நிர்பந்தம் காரணமாக 639 பேர் இறந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் உடல்நலக்குறைவு காரணமாக 2,567 பேர் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

காதல் விவகாரம் காரணமாக 3,315 பேர் தற்கொலை செய்து கொண்டனர். உடல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி 81 பேர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள். அன்புக்குரியவர்களின் இறப்பு ஏற்படுத்திய துக்கம் காரணமாகவும் சிலர் இறந்திருக்கிறார்கள். தற்கொலை செய்தவர்களில் பெண்களின் எண்ணிக்கை 13,325. திருமண நிர்பந்தத்தால் இறந்த 639 பேரில் பெண்
குழந்தை
கள் 411 பேர்.

ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 2017-ல் 8,029 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அது 2018-ல் 8,162 ஆக இருந்தது. 2018-ல் 8,377 ஆக உயர்ந்திருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையில் தற்கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் இருக்கின்றன.

பள்ளி பாடத்திட்டத்தில் வாழ்க்கைத் திறன் பயிற்சியை சேர்ப்பது, மனநலக் கல்வியை முதன்மைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் குழந்தைகள் மனதில் எழும் தற்கொலை எண்ணத்தை தவிர்க்கலாம் என்பது குழந்தை நல ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. மன அழுத்தம், சுய சந்தேகம், வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி, குடும்ப நிதி நிலைமை போன்றவையும் தற்கொலையுடன் தொடர்புடையவை என்பதும் அவர்களின் வாதமாக இருக்கிறது.
Tags:    

Similar News