லைஃப்ஸ்டைல்
பேபி வியரிங்கை இப்படி மூன்று விதங்களில் பயன்படுத்தலாம்

குழந்தையை கைகளில் தூக்கி கஷ்டப்படவேண்டாம்

Published On 2021-07-22 03:31 GMT   |   Update On 2021-07-22 03:31 GMT
முந்தானையால் குழந்தையை பொதிந்துகட்டி இணைத்ததற்கு பதில் இப்போது புதிய முறையில் பாதுகாப்பாக பொருத்திக்கொள்கிறார்கள். அதற்கு ‘பேபி வியரிங்’ என்று பெயர்.
இளந்தாய்மார்கள் தங்கள் குழந்தையையும் நெஞ்சோடு இணைத்து கட்டிக்கொண்டு, இருசக்கர வாகனங்களை ஓட்டிக்கொண்டு வேகமாக செல்வதை இப்போது நகர சாலைகளில் ஆங்காங்கே காணமுடிகிறது. முன்பெல்லாம் கிராமங்களில் விவசாய வேலைகளுக்கு செல்லும் பெண்களும், கட்டுமான வேலைகளுக்கு செல்லும் பெண்களும் தங்கள் கை குழந்தைகளை லாவகமாக முந்தானையில் இணைத்து நெஞ்சோடு சேர்த்து கட்டிக்கொண்டு நடந்துபோவார்கள். இப்போது அது நாகரிகமான முறையில் நகரங்களில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது. முந்தானையால் குழந்தையை பொதிந்துகட்டி இணைத்ததற்கு பதில் இப்போது புதிய முறையில் பாதுகாப்பாக பொருத்திக்கொள்கிறார்கள். அதற்கு ‘பேபி வியரிங்’ என்று பெயர். இது பயணச் சூழலுக்கு தகுந்தபடி தாயையும்- குழந்தையையும் நெஞ்சோடு நெஞ்சாய் இணைத்து பாதுகாப்பு அளிக்கிறது.

நவீன காலச் சூழலில் இப்படிப்பட்ட ‘கங்காரு தாய்மார்கள்’ உருவாகுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வேலை தேடி நிறைய பேர் இப்போதும் பெருநகரங்களில் குவிந்துகொண்டிருக்கிறார்கள். சொந்த ஊர்களில் திருமண பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டாலும், வேலை பார்க்கும் இடத்தில்தான் அவர்கள் குடும்ப வாழ்க்கையை தொடங்கவேண்டியதிருக்கிறது. அவர்கள் தனிக்குடித்தனம் அமைக்கும்போது நகர வாழ்க்கையை ஓரளவாவது நல்லவிதமாக நகர்த்தவேண்டும் என்றால், கணவன்- மனைவி இருவருமே வெளியே சென்று வேலை பார்க்க வேண்டிய சூழலுக்கு உள்ளாகிறார்கள்.

அப்படிப்பட்ட பெண்கள் தாய்மையடைந்து
குழந்தை
பெற்றுக்கொள்ளும்போது அவர்கள் குழந்தையையும் கவனிக்கவேண்டும். வெளி வேலைகளையும் செய்தாகவேண்டும். அப்போது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் இப்படி கங்காரு தாய்மார்களாக மாறவேண்டியதிருக்கிறது. வெளியே போகும்போது மட்டுமின்றி வீட்டில் தனியாளாக நின்று வேலைபார்க்கும்போதும் பெண்கள் இந்த பேபி வியரிங்கை பயன் படுத்துகிறார்கள். அதில் அமர்ந்திருக்கும் குழந்தைகள் தாயின் முழுமையான அருகாமை தனக்கு கிடைத்திருப்பதை உணர்ந்து அப்படியே தூங்கிவிடுகிறார்கள் அல்லது விழித்திருந்து வேலைபார்க்கிறார்கள். தாயாரால் பயணிப்பது, வேலைபார்ப்பது, ஷாப்பிங் செல்வது போன்ற அனைத்திற்கும் இது சவுகரியமாக இருக்கிறது. ஆனால் இதிலும் கவனிக்கத் தகுந்த சில விஷயங்கள் இருக்கின்றன. அதை சரியாக செயல்படு்த்தாவிட்டால் தாய்க்கும், குழந்தைகளுக்கும் ஆரோக்கிய பிரச்சினைகள் உருவாகும். பேபி வியரிங்ஸ்சில் முக்கியமாக மூன்று வகைகள் உள்ளன.

பேபி வியரிங் ஸ்லிங்குகள்: தாயின் ஒரு தோளையும், உடலையும் சேர்த்துக்கட்டி அதற்குள் குழந்தையைவைக்கும் துணி இதில் முக்கியமானது. இதில் பேடு அமைப்பும் இருக்கிறது. பேடு இல்லாமல் துணிபோன்ற அமைப்பு கொண்டதாகவும் இருக்கிறது. நீளத்தை கூட்டவோ, குறைக்கவோ வசதியான ரிங் அமைப்புகளும் இதில் உள்ளன. பேபி வியரிங் ராப்ஸ்: இரண்டு தோள்கள் மற்றும் உடலோடு சுற்றிக்கட்டும் முறை இது. சவுகரியமானது. செலவு குறைந்தது. கேரியர்ஸ்: இது மிக மென்மையான பொருட்களால் குழந்தைகளுக்கு ஏற்ற விதத்தில் தயாரிக்கப்படுகிறது. குழந்தைக்கு இருக்கும் வசதி, ஸ்ட்ராப்புகள்,
குழந்தை
க்கு பாதுகாப்பளிக்கும் பக்கிள்கள் போன்றவை இதில் இருக்கின்றன. குழந்தையை அதிக நேரம் தாயால் கைகளிலோ, இடுப்பிலோ தூக்கிவைக்க முடியாதபோது இதனை பயன்படுத்துவதே பொருத்தமாக இருக்கும்.

இவைகளை பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. குழந்தை மூச்சுவிடுவதற்கு எந்த விதத்திலும் சிரமம் ஏற்படாத அளவுக்கு இதில் உட்காரவைக்கவேண்டும். குழந்தையின் முகவாய் பகுதி தாயின் மார்போடு போய் அழுந்தும்படி உட்காரவைக்கப்பட்டிருந்தால் குழந்தை மூச்சுவிட சிரமப்படும். பேபி கேரியரின் மேற்பகுதி குழந்தையின் முகத்தில் படக்கூடாது. எப்போதும்
குழந்தை
யின் முகவாய் சற்று மேல்நோக்கி இருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். குழந்தையின் காது அம்மாவின் மார்பில் சாய்ந் திருக்கும்படி உட்காரவைக்கவேண்டும்.

இதனை பயன்படுத்தி குழந்தையோடு வெளியே செல்வதற்கு முன்பு, வீட்டில் வைத்தே இதனை உபயோகித்து பழக்கப்படுத்திக்கொள்ளவேண்டும். படுக்கை போன்ற எதையாவது கீழே விரித்து அதில் நடந்தபடி ஒத்திகைப் பார்க்கவேண்டும். தவிர்க்க முடியாத சூழலில் குழந்தை கீழே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் இருக்கத்தான் இந்த ஏற்பாடு. பாதுகாப்பாக பயன்படுத்த தெரிந்த பின்பு அதனை அணிந்துகொண்டு முதலில் அருகில் உள்ள கடைகளுக்கு செல்லவேண் டும். அடுத்து படிப்படியாக தூரத்தை அதிகரிக்கவேண்டும்.
குழந்தை
யை முன்னோக்கி உட்காரவைக்கும் விதத்திலானவற்றை தவிர்ப்பது நல்லது. அதில் இருக்கும்போது அதிக நேரம் குழந்தை கால்களை முன்னோக்கி வைத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். அதனால் குழந்தைக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் உருவாகும்.

குழந்தையும், தாயும் முகத்தோடு முகம் பார்க்கும் விதத்திலான பேபி வியரிங் சிறந்தது. குழந்தை இருக்கும் இடம் தாழ்ந்தும் போய்விடக் கூடாது. குழந்தையின் பின்பகுதி இருக்கும் இடம் அகலமாகவும் இருக்கவேண்டும். அகலம் குறைந்திருந்தால் குழந்தையின் இடுப்பில் பிறழ்வு ஏற்படும் நிலை உருவாகும். பேபி வியரிங் வாங்க வேண்டும் என்று தீர்மானித்துவிடும்போதே அது பற்றி உங்கள் குழந்தைக்கான டாக்டரிடம் கலந்துபேசி, அவர் கூறும் ஆலோசனை களையும் கேட்டுக்கொள்ளுங்கள். வாங்கும்போது குழந்தையையும் தூக்கிச் சென்று உட்காரவைத்துப் பார்த்து
குழந்தை
க்கும்-தாய்க்கும் அது பொருத்தமாக இருப்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள்.

பேபி வியரிங் அணிந்து செல்லும்போது அவ்வப்போது ஒருகையால் குழந்தையை தாங்கி சற்று தூக்கிவிடும் பழக்கத்தை தாய்மார்கள் ஏற் படுத்திக்கொள்ளவேண்டும். குழந்தை நன்றாக மூச்சுவிடு வதையும், அது எந்த வித நெருக்கடியும் இன்றி உட்கார்ந்திருப்பதையும் கவனித்துக்கொள்ளவேண்டும். இதில் ஏற்படும் ெபரிய பிரச்சினை குழந்தைக்கு நன்றாக வியர்க்கும். அதனால் அதன் உடல் எளிதாக சூடாகிவிடும். அந்த அவஸ்தையை தாங்கிக்கொள்ள முடியாத குழந்தைகள் அழத் தொடங்கிவிடும். அதனால் பேபி வியரிங்கை பயன்படுத்தும்போது குழந்தைகளுக்கு தளர்வான பருத்தி ஆடைகளை அணிவியுங்கள். சிலர் நெஞ்சோடு
குழந்தை
ரொம்பவும் நெருக்கமாக இருப்பதுதான் பாதுகாப்பு என்று கருதி, இறுக்கி கட்டிவிடுவார்கள். அது குழந்தைக்கு அவஸ்தையை கொடுப்பதோடு, அடுத்தடுத்த நாட்களில் குழந்தையின் முதுகெலும்பிற்கும் பாதிப்பை உருவாக்கிவிடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பயணங்களிலும், ஷாப்பிங் செல்லும்போதும் குழந்தைகளுக்கு பேபி வியரிங் நல்லதுதான் என்றாலும் குறைப்பிரவசத்தில் பிறந்த குழந்தைகளையும், நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளையும் அதில் உட்காரவைக்காமல் இருப்பது நல்லது. பேபி வியரிங் பயன்படுத்தும்போது தாயின் மார்போடு குழந்தை
சேர்ந்திருப்பதால் குழந்தையிடம் ஏற்படும் சின்னச்சின்ன சலனங்களையும் தாயால் கண்டறிய முடியும். தாயிடம் கண்ணுக்கு கண் பார்ப்பதால் அது பாதுகாப்பு உணர்வோடு அழாமல், தொல்லைதராமல் அக்கம் பக்கம் பார்த்துக்கொண்டிருக்கும்.

பேபி வியரிங்கில் குழந்தை உட்கார்ந்திருக்கும்போது தாய்க்கு அது சுமையாகத்தான் இருக்கும். அப்போது தாய் தனது ஒவ்வொரு செயலையும் மிக கவனமாக செய்யவேண்டும். அவள் தடுமாறி கீழே விழும் சூழ்நிலை உருவானால் குழந்தைக்கும் பலத்த அடிபடும். அதனால் பேபி வியரிங் பயன்படுத்தும்போது தாய் மிகுந்த கவனத்துடன் கையாளவேண்டும். அதிலும் இரு சக்கர வாகன பயணத்தில் மிக அதிக கவனம் தேவைப்படும். குழந்தையின் பருவம், உடல் எடை போன்றவைகளை கருத்தில்கொண்டு பொருத்தமானவற்றை தேர்ந்தெடுங்கள்.
Tags:    

Similar News