லைஃப்ஸ்டைல்
`ஆன்லைன்' வகுப்பிலும் அசத்தலாம்...

ஆன்லைன் வகுப்பிலும் அசத்தலாம்...

Published On 2021-07-15 04:31 GMT   |   Update On 2021-07-15 13:15 GMT
பள்ளி சென்று படித்தால் மாணவர்கள், ஆசிரியரின் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆன்-லைன் வகுப்பில் அதற்கு வழியில்லை. பெற்றோரின் கவனத்தின் கீழ்தான், பிள்ளைகள் கல்வி கற்றாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது.
கொரோனாவின் 2-வது அலையும் கிட்டத்தட்ட முடிவை எட்டியிருக்கிறது. இந்தக் கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டங்கள் ஆன்-லைன் வாயிலாக அனைத்து வகுப்புகளுக்கும் நடத்தப்பட்டு வருகிறது. பள்ளி சென்று படித்தால் மாணவர்கள், ஆசிரியரின் கண்காணிப்பில் இருப்பார்கள். ஆன்-லைன் வகுப்பில் அதற்கு வழியில்லை. பெற்றோரின் கவனத்தின் கீழ்தான், பிள்ளைகள் கல்வி கற்றாக வேண்டும் என்ற நிலை இருக்கிறது. எனவே பெற்றோர்களும் இங்கே சில விஷயங்களை நினைவில் நிறுத்த வேண்டியதிருக்கிறது. அதுபற்றி பார்ப்போம்.

* ஆன்-லைன் மூலம் பிள்ளைகள், பாடங்களைப் படிக்கும் போது, கவனித்துப் பார்க்கிறார்களா? என்பதை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

* ஆசிரியர்களுடன், பெற்றோர்கள் அடிக்கடி பேசி, பிள்ளைகள் சரியாக ஆன்-லைன் வகுப்பை கவனிக்கிறார்களா? என்பது பற்றி கேட்டுக் தெரிந்துகொள்ளலாம்.

* பிள்ளைகள் ஆன்-லைன் வகுப்பில் இருக்கும்போது, அதற்கு தகுந்த அமைதியை வீட்டில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பிள்ளைகளை படிக்க சொல்லிவிட்டு தொலைக்காட்சி பார்ப்பது, வீட்டில் உள்ள மற்றவர்களுடன் சேர்ந்து அரட்டை அடிப்பது போன்ற விஷயங்கள், பிள்ளைகளின் படிப்பு மீதான கவனத்தை சிதறடிக்கும்.

* ஒவ்வொரு நாளும் எந்தெந்த பாடங்களை படிக்க வேண்டும் என்பதை பட்டியலிட்டு, அதற்கு ஏற்ற வகையில் அவர்களை படிக்க வைக்க வேண்டும். பிள்ளைகளை அன்புடன் அரவணைத்து சொல்லிக் கொடுப்பது மிகவும் அவசியம்.

* படிப்பு நேரம் முடிந்தபிறகு, அவர்கள் விளையாடுவதற்கும் கொஞ்சம் அனுமதிக்க வேண்டும். வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடப்பது அவர்களுக்கும் மன இறுக்கத்தை உண்டாக்கக்கூடும்.

மேற்கண்ட குறிப்புகளை கடைப்பிடித்து வந்தாலே, உங்கள் பிள்ளைகள் படிப்பில் சிறந்த நிலையை அடைவார்கள்.
Tags:    

Similar News