லைஃப்ஸ்டைல்
பிள்ளைகள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்

பிள்ளைகள் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும்

Published On 2021-07-14 04:30 GMT   |   Update On 2021-07-14 04:30 GMT
இளஞ் சிறார்கள் தங்கள் வயதுக்கேற்ப பல விளையாட்டுகளிலும், உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுதல் அவர்களது உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் அவசியமாகும்.
விளையாட்டு‘ஓடி விளையாடு பாப்பா-நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா’

என்று சின்னஞ் சிறுவர்களை பார்த்து கூறுகிறார் பாட்டுக் கொரு புலவரான பாரதியார். உடல் நலம் பெற வேண்டுமானால் நாம் ஓடி விளையாட வேண்டும். அப்போது தான், ரத்த ஓட்டம் சீராக அமையும். உடல் உறுதி பெறும். ஆரோக்கிய வாழ்வுக்கு இது வகை செய்யும். ‘ஆரோக்கியம் உள்ள உடலிற்றான் ஆரோக்கியமான மனநலம்‘ இருக்கும் என்பர். குழந்தை பருவத்தில் இருந்தே விளையாட்டுகளில் பயிற்சி கொடுக்கிறார்கள் சீனர்கள். தற்காப்பு கலைகளையும் கற்றுக் கொடுக்கிறார்கள்.

இதனால் தான், அந்த குழந்தை
கள் வளர்ந்த பிறகு போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை குவிக்கிறார்கள். ஆனால், நம் நாட்டில் அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். குறைந்த பட்சம் 1-ம் வகுப்பு பள்ளியில் சேர்த்த பிறகாவது குழந்தைகளுக்கு விளையாட்டுகளில் பங்கேற்கும் வகையில் பயிற்சி அளிக்க வேண்டும். இளஞ் சிறார்கள் தங்கள் வயதுக்கேற்ப பல விளையாட்டுகளிலும், உடல் பயிற்சிகளிலும் ஈடுபடுதல் அவர்களது உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் அவசியமாகும். விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட வேண்டும். படிக்க வேண்டிய நேரத்தில் படிக்க வேண்டும். பெற்றோர்களுடன் இணைந்து அவர்களுக்கு சிறு சிறு உதவிகளையும் மாணவர்கள் செய்ய வேண்டும்.

கல்லூரிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களிலும், நமது கிராமங்களில் உள்ள திறந்த வெளி மைதானங்களிலும் நாம் விளையாடலாம். தெரு வீதிகளில், சாலைகளில் கண்டிப்பாக விளையாடக் கூடாது. அவ்வாறு விளையாடுவது ஆபத்தானது. விளையாட்டுகளில் ஈடுபடும் போது கட்டுப்பாட்டுடனும், ஒழுங்குடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும். நடுவர் கூறும் தீர்ப்பை மதித்து நடத்தல் வேண்டும்.

ஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியாரின் வாக்குக்கிணங்க மாணவ-மாணவிகள் படிப்பில் கவனம் செலுத்துவது மட்டுமின்றி விளையாட்டிலும் கவனம் செலுத்த வேண்டும்.

Tags:    

Similar News