லைஃப்ஸ்டைல்
டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு ஏன் உடற்பயிற்சி அவசியம் தெரியுமா?

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு ஏன் உடற்பயிற்சி அவசியம் தெரியுமா?

Published On 2021-05-27 03:26 GMT   |   Update On 2021-05-27 03:26 GMT
நம்மிடையே வாலிப வயதினர் தான் ஜிம்முக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி ஒன்று கிடையாது. டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் பண்ணலாம்.
சிறுவர், சிறுமியரும் எந்நேரமும் உட்கார்ந்த இடத்திலே செல்போனில் கேம் விளையாடுகின்றனர். அதனால் உடல் பருமன், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர். அவற்றை தவிர்க்க டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். அடுக்கடுக்காய் பாடம், இந்த கோச்சிங், அந்த கோச்சிங் என பிள்ளைகளுக்கு விளையாட்டு என்பதே இல்லாமல் போய் உடற்பருமன், பெண் பிள்ளைகள் சிறுவயதில் பூப்பெய்துதல் போன்றவை ஏற்படுகிறது.நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து காணப்படுகிறது.

பள்ளியிலும் முன்பு பிள்ளைகள் விளையாட்டு வகுப்பில் நன்கு விளையாடுவார்கள். இப்போது சில பள்ளிகளில் அந்த விளையாட்டு நேரத்தையும் ஏதாவது பாட வகுப்பிற்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். பிஸிகல் ஆக்டிவிட்டீஸ் குறையும் போது இளம் பிள்ளைகள் உளவியல்ரீதியாகவும் பாதிக்கப்படுவார்கள். இதனால் ஸ்ட்ரெஸ், டிப்ரெஷன் போன்ற பிரச்னைகள் அவர் களுக்கு ஏற்படுகிறது. இதனால் வளரும் போது அவர்களது குணத்திலும் மாறுபாடு தோன்றலாம்.

முறையான பயிற்சிகள் அற்றுப்போகும் போது வளரும் பிள்ளைகளுக்கு இன்ட்யூரன்ஸ் லெவல் குறையும். இன்ட்யூரன்ஸ் லெவல் என்பது தூரத்தில் நிற்கும் பேருந்தை பிடிக்க ஓடும் போது முறையான பயிற்சிகள் செய்யும் குழந்தையால் ஓடிப்போய் அந்த பேருந்தை பிடிக்க முடியும். அதுவே பயிற்சியற்ற குழந்தையிடம் இன்ட்யூரன்ஸ் லெவல் குறைவாக இருக்கும்பட்சத்தில் அந்த குழந்தையால் அந்த தூரத்திற்கு ஓட முடியாமல் போகலாம் அல்லது நினைத்த நேரத்திற்கு ஓடிச்சென்று அந்த பேருந்தை பிடிக்க முடியாமல் போகலாம். இன்ட்யூரன்ஸ் லெவலை அதிகரிக்க ஜிம் பயிற்சிகள் உதவும்.

அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு ஜிம் ஒரு நல்ல வரம். ஜிம்முக்குச் சென்று தேவையான பயிற்சிகளை மேற்கொண்டால் பிள்ளைகள் பலம் பெறுவார்கள். குறிப்பாக பெண் பிள்ளைகள். இப்போது இருக்கிற சமூக சூழ்நிலையில் பெண் பிள்ளைகள் நல்ல உடல் பலத்தோடு இருக்க வேண்டியது மிக அவசியமான ஒன்று. நம்மிடையே வாலிப வயதினர் தான் ஜிம்முக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. அப்படி ஒன்று கிடையாது. டீன் ஏஜ் பிள்ளைகளும் ஜிம்முக்கு சென்று ஒர்க் அவுட் பண்ணலாம். அங்கே அவர்கள் வயதிற்கேற்ப பயிற்சிகள் கொடுக்கப்படும்.

பிஸிகல் ஆக்டிவிட்டி இல்லாத பிள்ளைகளுக்கு அதற்கேற்றாற் போல் பயிற்சிகள், தொப்பை உடன் இருக்கும் பிள்ளைகளுக்கென்று வயிற்றுத் தசை பயிற்சிகள் என கற்றுத்தரப்படும். வளர்ச்சிக்காக ஸ்கிப்பிங், ஜம்பிங் போன்ற பயிற்சிகள், பொதுவாக பிள்ளைகளுக்கென்று உடலை வலுவாக்கும் பயிற்சிகள், த்ரெட் மில், சைக்கிளிங் போன்ற ப்ளோர் கார்டியோ ஒர்க் அவுட் போன்றவற்றை கற்றுக்கொடுப்பார்கள்.

இதனால் அவர்களது எனர்ஜி லெவல் அதிகரிக்கும். அவர்கள் உடம்பின் தேவையற்ற கலோரிகள் எரிக்கப்படும். ஃபிட்னஸ் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். உடம்பில் ப்ளக்ஸிபிலிட்டி இருக்கும். சாதாரணமாகவே ஒரு நாள் முழுவதும் கையை அசைக்காமல் வைத்திருந்தால் மறுநாள் வேலை செய்யும்போது கடினமாக இருக்கும். அதனால் முறையான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ளும் போது உடம்பில் நல்ல வளைவுத்தன்மை இருக்கும்.

சில குழந்தைகளுக்கு பிறப்பிலே தசைகள் பலவீனமாக இருக்கும். அவர்களால் எடை அதிகமுள்ள பொருளை தூக்க முடியாது. நீண்ட தூரம் ஓட முடியாது. வயிற்றில் இருக்கும் போது தேவையான ஊட்டச்சத்து கிடைக்காதது ஒரு காரணமாக இருக்கலாம். அப்படிப்பட்ட பிள்ளைகளும் தொடர் பயிற்சிகள் மேற்கொள்ளும் போது தசைகள் நல்ல வலுப்பெறும். அதுமட்டுமன்றி சில ஜிம்மில் யோகா, ஏரோபிக்ஸ் போன்ற பயிற்சிகளும் கற்றுத்தரப்படுகிறது.

சில வீடுகளில் நீச்சல் போன்ற பயிற்சிகள் கற்றுக்கொள்ள உத்வேகம் தருகிறார்கள். அது நல்லது. ஆனால் ஜிம்முக்குப் போவதை யாரும் என்கரேஜ் செய்வதில்லை. ஜிம்முக்குச் சென்று பயிற்சிகள் செய்வதும் நல்லது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
Tags:    

Similar News