பெண்கள் உலகம்
குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க என்ன செய்யலாம்...

குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க என்ன செய்யலாம்...

Published On 2021-04-15 08:53 IST   |   Update On 2021-04-15 08:53:00 IST
குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க சில வழிமுறைகளை பெற்றோர் அவர்களது சொல்லித்தரலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
கொரோனா வைரஸால் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விட்டதால் குழந்தைகள் வீட்டில் சுற்றி சுற்றி வருகிறார்கள். எவ்வளவு நேரம் தான். டிவி, போனை நோட்டி கொண்டிருப்பார்கள். குழந்தைகள் விடுமுறையை உபயோகமான முறையில் கழிக்க சில வழிமுறைகளை பெற்றோர் அவர்களது சொல்லித்தரலாம். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

* குழந்தைகளை காலையில் அல்லது மாலையில் அழைத்துக்கொண்டு வாக்கிங் செல்லலாம். அப்போது அவற்றின் பலன்களைக் கூறலாம்.

* ஆன்லைன் விளையாட்டுக்களில் குழந்தைகளுடன் இணைந்து விளையாடலாம்.

* காய்கறிகளை கழுவுதல், வேக வைத்த உருளைக்கிழங்கை உரித்தல், வெங்காயம் உரித்தல் என சின்னச் சின்ன வீட்டு வேலைகளில் ஈடுபடுத்தலாம்.
 
* தேங்காய் ஓடு, இளநீர் காலி தேங்காயில் சிவப்பு மண்ணை நிரப்பி, கொத்தமல்லி உட்பட எளிதில் வளரும் தானியங்களை தெளித்து தினமும் தண்ணீர் தெளித்து வரச்செய்யலாம். அவை துளிர் வருவதை பார்க்கும் போது அவர்களுக்கு மேலும் ஆர்வம் ஏற்படும். அதன் பிறகு பெரிய தொட்டியில் மிளகாய், தக்காளி போன்ற காய்கறிகளை வளர்க்க சொல்லித் தரலாம்.

* வீட்டை சுத்தப்படுத்த கற்றுத்தரலாம்.

* ‘போர்’ என வரும் குழந்தைகளை விரட்டாமல் புதிதாக ஏதாவது ஐடியா கொடுக்க தயாராக இருக்க வேண்டும். அப்படி கொடுக்கும்போது குழந்தை அதனைப் பிடித்துக்கொண்டு ஆர்வமாய் விளையாடுவர்.

* புத்தகம் படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட இதை விட சிறந்த நேரம் கிடையாது. அதனால் குழந்தைகளை கதை புத்தகங்களை தமிழில் வாங்கிக் கொடுத்து படிக்க பழகப்படுத்தலாம்.

* பணம், காசு கொடுத்து அதில் அவர்களுக்கு எளிதாக கணக்கு சொல்லித் தரலாம்.

Similar News