லைஃப்ஸ்டைல்
பெற்றோர்களே குழந்தைகளுக்கு ‘டே கேர்’ தேர்ந்தெடுக்கும்போது இதை மறக்காதீங்க..

பெற்றோர்களே குழந்தைகளுக்கு ‘டே கேர்’ தேர்ந்தெடுக்கும்போது இதை மறக்காதீங்க..

Published On 2021-03-24 03:28 GMT   |   Update On 2021-03-24 03:28 GMT
வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் பணி நேரம் முடியும் வரை குழந்தைகளை பராமரிக்கும் ‘டே கேர்’ வசதி கொண்ட பள்ளிகளை அணுகுகிறார்கள். அத்தகைய பள்ளிகளை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:
குழந்தைகளை முதலில் மழலையர் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு பெரும்பாலான பெற்றோர் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் பணி நேரம் முடியும் வரை குழந்தைகளை பராமரிக்கும் ‘டே கேர்’ வசதி கொண்ட பள்ளிகளை அணுகுகிறார்கள். அத்தகைய பள்ளிகளை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்:

* நன்கு பயிற்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள்தான் குழந்தைகளின் எதிர் காலத்திற்கு வழிகாட்டியாக விளங்குகிறார்கள். அவர்களின் செயல்பாடுகள் குழந்தைகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் பள்ளியில் சேர்ப்பதற்கு முன்பு அங்குள்ள ஆசிரியர்கள் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.

* குழந்தைகள் மீது ஆசிரியர்கள் அக்கறை கொண்டவர்களாகவும், நம்பகமானவர்களாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்கள் எந்த அளவிற்கு குழந்தைகளின் நலனில் அக்கறை கொள்கிறார்களோ அந்த அளவிற்கு குழந்தைகள் கல்வி கற்கும் திறனும் சிறப்பாக இருக்கும்.

* குழந்தையை மழலையர் பள்ளியில் சேர்த்து சில நாட்கள் கடந்ததும் பள்ளிக்கூடத்திற்கு சென்று ஆசிரியருடன் எந்த அளவிற்கு குழந்தை நட்பு கொண்டிருக்கிறது என்பதை அங்குள்ளவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தை பேச தயங்கினால், அந்த தயக்கத்தை போக்க வழிவகை செய்யுமாறு ஆசிரியரிடம் கூற வேண்டும். ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு கதைகள் சொல்லிக்கொடுக்க வேண்டும். விளையாடுவதற்கும் ஊக்கப்படுத்த வேண்டும். குழந்தைகளின் நல்ல செயல்களை பாராட்டி ஊக்குவிக்கவேண்டும். இத்தகைய நடைமுறைகள் பள்ளிக்கூடத்தில் பின்பற்றப்படுகிறதா என்பதை கேட்டறிவது அவசியம்.

* மழலையர் பள்ளிகள் சமூகம் சார்ந்த விஷயங்களை போதிக்கும் இடமாகவும், குழந்தைகளின் மன வளர்ச்சியை மேம்படுத்தும் இடமாகவும் விளங்க வேண்டும். ஒழுக்கத்தை கற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்கிக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்களும் பொறுமையாக குழந்தைகளுக்கு போதிக்கிறார்களா? என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

* விளையாட்டுடன் தொடர்புபடுத்தி குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தால் விரைவாக புரிந்து கொள்வார்கள். அப்போது அவர்கள் கற்றுக்கொண்ட விஷயங்களும் நினைவில் இருக்கும். அதனால் மழலையர் பள்ளியை தேர்ந் தெடுக்கும்போது விளையாட்டு சார்ந்த பயிற்சி இருக்கிறதா? என்பதையும் கவனிக்க வேண்டும்.
Tags:    

Similar News