லைஃப்ஸ்டைல்

குழந்தைகளை கட்டாயப்படுத்தி உண்ண வைப்பது தவறு

Published On 2018-03-13 02:37 GMT   |   Update On 2018-03-13 02:37 GMT
பெற்றோர் குழந்தைகளை கட்டாயப்படுத்தி உண்ண வைக்கிறார்கள். அதனால் குழந்தைகளின் எடை கூடுவது போன்ற பிரச்சினைகள் மிகச் சுலபமாக ஆரம்பித்து விடுகின்றன.
குழந்தைகளின் ஆரோக்கியம் பற்றிய அதிக அக்கறை காரணமாக தாய்மார்களும், பாட்டிகளும் குழந்தைகளை கட்டாயப்படுத்தி, அதிகம் உண்ண வைக்கின்றனர்.

பொதுவாக குழந்தைகள் இயற்கையோடு அதிகம் இயைந்து இருக்கிறார்கள். அன்புடன் கொடுக்கும் உணவைக்கூட அவர்கள் மறுத்தால், உண்மையில் அவர்களுக்குப் பசியில்லை என்பதே பொருள்.

அதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. கட்டாயப்படுத்தி உண்ண வைக்கிறார்கள். அதனால் குழந்தைகளின் எடை கூடுவது போன்ற பிரச்சினைகள் மிகச் சுலபமாக ஆரம்பித்து விடுகின்றன. இன்னொரு உளவியல் சார்ந்த பிரச்சினை சிறிய குடும்பங்களில் வருகிறது. இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பங்களில் குழந்தைகளோடு அதிகம் நேரம் செலவிடமுடியாமல் போகிறது.

இந்த உறுத்தலை தவிர்க்க, தயார்நிலையிலுள்ள உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். இதனால் குழந்தைகளின் உடல்நலமே கெடுகிறது. “சொந்த செலவில் சூன்யம் வைப்பது” என்பார்களே, அதைப்போல, தாங்களே தங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுப்பதற்குப் பதிலாக, அவர்களுடன் அதிக நேரம் செலவிட்டு, அவர்களைக் கவனிக்க நேரம் ஒதுக்கவேண்டும்.
Tags:    

Similar News