லைஃப்ஸ்டைல்

குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான காரணங்களும் சிகிச்சைகளும்

Published On 2018-03-02 04:16 GMT   |   Update On 2018-03-02 04:16 GMT
பல காரணங்களால் வாந்தி வரும். குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கான காரணத்தையும் அதற்கான சிகிச்சையையும் விரிவாக பார்க்கலாம்.
பல காரணங்களால் வாந்தி வரும். அவற்றில் சில உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தக்கூடியவை. வாந்தி எடுப்பதற்கு காரணம் குடல் பாகம் இல்லாதிருத்தல், குடல் இடம் மாற்றம், வால்வுகள், ரத்தத்தில் நோய்க் கிருமிகள், மூளைக்காய்ச்சல், மூச்சுத் திணறல், மூளையின் நீர் அதிகமாதல், தவறான முறையில் பால் புகட்டுதல் போன்ற காரணத்தால் சிறு குழந்தைகளுக்கு வாந்தி ஏற்படுகிறது

ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் வாந்தி எடுப்பதற்கு காரணம் தவறான முறையில் பால் புகட்டுதல், அதிகப்பால் கொடுத்தல், பிறப்பிலேயே குடல் வீங்கி அடைத்துக் கொள்ளுதல், பேதி, மூளையில் கிருமிகள் தாக்கம், மூளையில் ரத்தக்கட்டு, மூளையில் நீர் அதிகமாதல், மாட்டுப்பால் அலர்ஜி

மனநிலை பாதிப்பு, சிறுநீரில் கிருமி, மஞ்சள் காமாலை, நீரிழிவு நோய், நிமோனியா காய்ச்சல், குடல் அடைப்பு போன்ற காரணத்தால் சிறுவர்கள் வாந்தி எடுப்பதுண்டு.

நிறைய குழந்தைகள் சாதாரணமாகவே சிறு சிறு காரணங்களுக்காக வாந்தி எடுப்பார்கள். அதனால் பயப்பட வேண்டாம். சர்க்கரை - உப்புக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்தால் போதும். சில குழந்தைகள் வாந்தி எடுத்தாலும், அவற்றின் உடல் எடை மற்றும் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அத்தகைய குழந்தைகளுக்குச் சிகிச்சை தேவையில்லை.

அடிக்கடி வாந்தியோ, தொடர் வாந்தியோ இருந்தால், அவற்றுடன் வேறு நோய்கள் ஏதாவது இருந்தாலும், குழந்தையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து சாயான சிகிச்சை அளிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் தாமாகவே சிகிச்சை அளிக்கவோ, வீட்டில் இருக்கும் மருந்துகளைக் கொடுக்கவே கூடாது. அதனால், குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும்.
Tags:    

Similar News