லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு சாப்பிட சொல்லிக்கொடுப்பது எப்படி?

Published On 2018-02-06 07:51 GMT   |   Update On 2018-02-06 07:51 GMT
குழந்தைகள் தானாக சாப்பிடுவது எப்படி, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று கற்றுத் தரவேண்டியது மிகவும் அவசியமானதாகும்.
குழந்தைகளை ஆரோக்கியமாகவும் பாதுகாப்பாகவும் வளர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. அதற்காக நாம் அவர்களுக்கு தண்ணீர் முதல் ஆடை, உணவு, மருந்து என சின்னச் சின்னதாக அத்தனை விஷயங்களிலும் முழு கவனத்துடன் இருக்க வேண்டும்.

அதனால் குழந்தை கொஞ்சம் வளர ஆரம்பித்ததும் அவர்களுக்கு எது தேவையோ அதை அவர்களாகவே புரிந்து கொண்டு, செய்து கொள்ள முயற்சி செய்யும் அளவுக்கு பெற்றோர்கள் கற்றுத்தர வேண்டும்.

அதேசமயம் அவற்றை ஆரோக்கியமான முறையில் எப்படி செய்ய வேண்டும் என்பதையும் சொல்லிக் கொடுப்பது அவசியம். குறிப்பாக, ஆரோக்கியமான முறையில் எப்படி சாப்பிட வேண்டும் என்று குழந்தைகளுக்குக் கற்றுத் தருவது மிக அவசியம்...



குழந்தைகள் தங்களுக்குப் பிடித்ததையோ ஏதாவது விளையாட்டுப் பொருட்களையோ தொட்டு, எடுப்பதுண்டு. அதனால் எப்போது சாப்பிடுகிற பொருட்களைத் தொட நேர்ந்தாலும் அதற்கு முன்பாக கைகளை நன்கு கழுவ வேண்டும் என்று சொல்லிப் பழக்க வேண்டும்.

அதைவிட வீட்டில் குழந்தைகள் உள்ள வீடாக இருந்தால் எனாமல் போர்டு கொண்ட வெஜிடபிள் கட்டர்களைத் தவிர்க்க வேண்டும். அவை காய்கறியோடு கலந்து குழந்தைகளின் வயிற்றுக்குள் போய்விடும்.

வண்ணத்தாள்களில் சுற்றப்படுகிற, அல்லது வண்ணங்கள் சேர்க்கப்படுகிற உணவுகளை முற்றிலும் தவிர்க்கக வேண்டும். அவற்றில் உள்ள குறைபாடுகளை குழந்தைகளுக்கு எடுத்துரைப்பது மிக அவசியம்.

சாப்பிடும்பொழுது வேறு விடியோ கேம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்தக்கூடாது. இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும்.
Tags:    

Similar News