லைஃப்ஸ்டைல்

குழந்தைகள் மண் சாப்பிட காரணம் என்ன?

Published On 2017-12-19 08:40 GMT   |   Update On 2017-12-19 08:40 GMT
மண் தின்னும் குழந்தை என்றால் பெற்றோருக்குப் பெரும் வேதனை. குழந்தைகள் மண் சாப்பிடுவதற்கான காரணத்தை விரிவாக பார்க்கலாம்.
குழந்தைகளுக்கு எளிதாகக் கிடைக்கும் பொருள் தரையில் இருக்கும் மண், தூசு போன்றவை. இவ்வாறு மண் தின்னும் பழக்கம் PICA என்று அழைக்கப்படுகிறது.

ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடமே இப்பழக்கக் கோளாறு அதிகம் காணப்படுகிறது. பெற்றோரின் அன்பு மற்றும் அரவணைப் பின்மை, பாதுகாப்பற்ற உணர்வு, பெற்றோர் உணவூட்டும் பழக்கங்களிலுள்ள குறைபாடுகள், ரத்தசோகை, மனவளர்ச்சிக் குறைபாடு போன்ற காரணங்களால் மண் தின்னும் பழக்கம் உருவாகி, வளர்ந்து நீடிக்கிறது.

குழந்தைகளின் தோற்றம் செயல்பாடு, மனநிலைகளுக்கேற்ப, கல்கேரியா கார்ப், சிலிகா, சிகூடா, அலுமினா, பெர்ரம்மெட், நேட்ரம்மூர், சினா, கல்கேரியாபாஸ், நைட்ரிக் ஆசிட், நக்ஸ்வாமிகா போன்ற ஹோமியோபதி மருந்துகள் மண், சாம்பல் தின்னும் பழக்கத்தை மாற்றியமைக்க உறுதியாக உதவும். மலர் மருந்துகளில் வால்நட், வொய்ட் செஸ்ட்நட் பட், செர்ரிப்பழம், சிக்கரி போன்ற மருந்துகள் குழந்தைகளிடம் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும். 

மேலும் வளரும் குழந்தைகளில் காணப்படும் பொறாமை, சந்தோஷம், பயம், தாழ்வு மனப்பான்மை,கோபம், எரிச்சல், பிடிவாதம், மந்தம், சோம்பல், ஞாபகக் குறைபாடு, பிறரைக் குறை கூறும் சுபாவம் போன்ற இயற்கைக்கு மாறான பல்வேறு குணக்கேடுகளையும் மாற்றி குழந்தைகளிடம் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குழந்தைகளின் மன ஆற்றல்களை அதிகரிக்கவும் செய்ய வேண்டும்.
Tags:    

Similar News