லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்

Published On 2017-12-15 06:27 GMT   |   Update On 2017-12-15 06:27 GMT
குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
குழந்தைகளை தாக்கும் சில நோய்களும் அதற்கு வீட்டில் கிடைக்கும் இயற்கை பொருட்களை கொண்டு எவ்வாறு தீர்வு காண முடியும் என்பதை பார்க்கலாம்.

1. வயிற்றுப்போக்கு - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும். 

2. சளி - துளசி இலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.

3. கக்குவான் - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.

4. சாதாரணக் காய்ச்சல் - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத்தீரும்.

5. உடம்பு வலி - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்.
Tags:    

Similar News