பெண்கள் உலகம்

குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை

Published On 2017-12-02 09:13 IST   |   Update On 2017-12-02 09:13:00 IST
குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது.
குழந்தைக்கு எவ்வளவு பால் கொடுக்க வேண்டும் எனபதை பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. போதுமான அளவு பால் குடித்ததும் குழந்தை தானாகவே குடிப்பதை நிறுத்தி கொள்ளும். குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் குழந்தையை தோள் மீது கிடத்தி அல்லது மடியில் நேராக உட்கார வைத்து மெதுவாக அதன் முதுகில் தட்டி கொடுங்கள். குழந்தை ஏப்பம் விடட்டும். 

பால் கொடுத்த பிறகு குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க வேண்டுமா? வேண்டாமா? என சில தாய்மார்கள் கேட்கிறார்கள். பொதுவாக பார்முலா உணவுகளில் உப்பு, புரதம், கார்போஹைட்ரேட்டுக்கள் போன்ற அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருக்கும் என்பதால் பால் மட்டுமே போதுமானது. ஆனால் காய்ச்சலுடனோ அல்லது வெயில் காலமாகவோ இருந்தால் குழந்தைக்கு நாவறட்சி ஏற்படும். இந்த சமயங்களில் அவ்வப்போது தண்ணீர் கொடுப்பது நல்லது.

பாட்டில் பால் குடிக்கும் குழந்தைக்கு அடிக்கடி மலசிக்கல் ஏற்படும். குறைவாக பால் குடிக்கும் குழந்தைக்கும் மலசிக்கல் வரும். இதை தவிர்ப்பதற்கு குழந்தைக்கு சரியான விகிதத்தில் பால் புகட்டுவது, போதுமான தண்ணீர் புகட்டுவது நல்லது. 

Similar News