லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைபாடு

Published On 2017-11-22 09:22 GMT   |   Update On 2017-11-22 09:22 GMT
பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.
ஊட்டச்சத்து குறைபாடு என்பது உணவில் தேவையான சத்துக்கள் போதுமான அளவவில் இல்லாமல் இருத்தலாகும். பொதுவாக 6 மாதங்கள் முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டினால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இது குழந்தைகளில் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து, தொற்று நோய்களை உண்டாக்க கூடும்.

குழந்தை பிறந்து 5 முதல் 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மாத்திரம் அதிகமாக தரவேண்டும்.

5 லிருந்து 6 மாதத்திற்கு பிறகு தாய்ப்பாலுடன் பிற இணைஉணவுப் பொருட்களான பசும்பால், பழங்கள், நன்கு சமைத்து மசித்த சாதம், பிற தானியவகை மற்றும் பருப்பு வகை உணவுப்பொருட்களை ஆகாரமாக தரவேண்டும்.

பின்னர் தானியங்கள், பருப்புகள், காய்கறிகள், பழங்கள், பால் மாற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பிற உணவுப் பொருட்களை கொண்ட முழுமையான உணவினை கொடுக்க வேண்டும்.

பெண் குழந்தைகளுக்கு சரியான மற்றும் போதுமான உணவு வழங்கப்படுகிறதா என்பதனை உறுதிசெய்ய வேண்டும்.

கர்ப்ப காலத்திற்கு / கர்ப்பமடைவதற்கு முன்னரே பெண்கள் போதுமான மற்றும் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்கின்றார்களா என்பதனை உறுதி செய்ய வேண்டும்.

சத்துணவு குறைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு சரியாய் சிகிச்சை அளிக்க வேண்டும்.
Tags:    

Similar News