லைஃப்ஸ்டைல்

குழந்தைகளின் ஞாபக சக்தியை அதிகரிக்க வழிகள்

Published On 2017-10-16 04:18 GMT   |   Update On 2017-10-16 04:18 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.
* பெற்றோர்கள் குழந்தைகளிடம் எதையும் முழு கவனத்தோடு தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், அதுவே எளிதில் புரிந்து மனதில் பதியும், ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை, ஆனால் எதையும் புரியாமல் படிக்கக் கூடாது என்று சொல்லி பழக்க வேண்டும்.

* எப்போதும் குழந்தைகளுக்கு படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதிலும் படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். எனவே படிப்பில் சற்று மந்தமாக இருக்கும் உங்கள் குழந்தைகளுக்கு இந்த முறையை அவசியம் பின்பற்றினால் மிகவும் நல்லது.

* உங்கள் குழந்தைகளை குறைந்தது 8 மணிநேரமாவது தூங்க வைக்க வேண்டும். மேலும் இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கத்தைப் பின்பற்ற வைக்க வேண்டும்.

* குழந்தைகளுக்கு மாவுச்சத்து உள்ள உணவுகளை விட, புரதச்சத்து நிறைந்த எளிதில் செரிமானமாகும் உணவை கொடுப்பது நல்லது. ஏனெனில் மாவுச்சத்துள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும்.

ஆகவே இத்தகைய பழக்கத்தை குழந்தைகளுக்கு வரவழைத்தால், அவர்களின் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, அவர்கள் சுறுசுறுப்போடும் இருப்பார்கள்.
Tags:    

Similar News