லைஃப்ஸ்டைல்

குழந்தையை தூங்க வைக்கும் முறை

Published On 2017-09-19 08:56 GMT   |   Update On 2017-09-19 08:56 GMT
பிறந்த குழந்தைகளை தூங்க வைக்க சில வழிமுறைகள் உள்ளன. அந்த முறைகளை பின்பற்றினால் குழந்தைகளுக்கு நன்றாக தூங்கும்.
குழந்தைகளை நல்ல மனநிலையோடும், நற்சிந்தனையோடும் வைத்திருக்கவேண்டும் என்பதே பெற்ற வயிறுகளின் தவிப்பு. அறிவிலும், உடல் நலத்திலும் ஆகச்சிறந்த வாரிசாக தங்கள் குழந்தைகளை வளர்க்க பெற்றோர்கள் பெரிதும் போராடுகிறார்கள்.

குழந்தை தூங்கும் வரை, அதன் அருகில் அரவணைத்தபடி பால் கொடுத்துவிட்டு, தூங்கியதும், புடவையில் கட்டிய தூளியில் போடலாம். தூளி அதிக உயரத்தில் இல்லாமல், தரையோடு இருப்பதுபோல் பார்த்துக் கொள்ளுங்கள்.  

தாயின் அரவணைப்பு தொடர்ந்து இருப்பதுபோல் அது உணரும். வெயில் காலத்தில் கட்டிலில் படுக்க வைப்பதைவிட, குழந்தைகளைத் தரையில் ஒரு பாயை விரித்து, அதில் பருத்திப் புடவையை மெத்தைபோல் நன்றாக மடித்துப் படுக்கவையுங்கள்.

உஷ்ணம் குழந்தையைத் தாக்காமல் குளிர்ச்சியாக உணரும். குழந்தையின் அருகில் கனமான பொருட்கள் எதையும் வைக்காதீர்கள். காற்றாடிக்கு நேராகப்படுக்க வைக்காதீர்கள். இதனால் குழந்தை மூச்சுத் திணறலுக்கு ஆளாக நேரிடும். காற்றாடியின் வேகத்தைக் குறைத்து, ஓரமான இடமாகத் தேர்ந்தெடுப்பது நல்லது.

ஒரே இடத்தில் படுக்கவைத்தாலும், உடலில் சீக்கிரமே உஷ்ணம் ஏறிவிடும். இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை, குழந்தையை இடம் மாற்றிப் படுக்கவைக்க வேண்டும்.
Tags:    

Similar News