லைஃப்ஸ்டைல்

வீட்டுக்கடன் பெற வங்கிகளுக்கு தர வேண்டிய சான்றுகள்

Published On 2017-08-19 04:48 GMT   |   Update On 2017-08-19 04:48 GMT
வீடு அல்லது மனைகளுக்காக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் வீட்டு கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகளை பார்க்கலாம்.
வீடு அல்லது மனைகளுக்கான வங்கி கடன் விண்ணப்பத்துடன், சுய விபரங்கள் அடங்கிய பல சான்றுகளை தர வேண்டியதாக இருக்கும். வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மூலம் வீட்டு கடன் பெற விரும்புபவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய சான்றுகள்:

பொதுவான சான்றுகள் :

* வயதை குறிப்பிடும் சான்று

* இருப்பிடத்திற்கான சான்று

* விண்ணப்பிப்பவர் பெறும் வருமானத்திற்கான அத்தாட்சி

* கடந்த 6 மாத காலத்திற்கான வங்கி ‘ஸ்டேட்மெண்ட்’

* விண்ணப்பிப்பவர்களது ‘பாஸ்போர்ட் சைஸ்’ புகைப்படங்கள்

மாத சம்பளம் பெறுபவர்கள் :

* ‘சாலரி ஸ்லிப்’ மற்றும் பார்ம்-16ஏ

* ‘ரேஷன் கார்டு’, ‘பான் கார்டு’, தொலைபேசி கட்டண ரசீதுகள் அல்லது மின்கட்டண ரசீதுகளின் ‘ஜெராக்ஸ்’ நகல்கள்

* மற்ற அசையா சொத்துக்கள் பற்றிய சான்றுகள்

* ஆயுள் காப்பீட்டு செய்திருந்தால் அதற்கான ‘பிரிமியம்’ செலுத்தியதற்கான ரசீதுகள்

* ஆறு மாதங்களுக்கான ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’ மற்றும் தேவையான அளவு புகைப்படங்கள்



தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் :

* எவ்வகை தொழில் அல்லது வியாபாரம் என்பது பற்றிய தகவல்கள்

* வியாபாரம் அல்லது தொழில் நிறுவனத்தின் பதிவு சான்றிதழ்கள்

* அங்கீகரிக்கப்பட்ட கணக்கு தணிக்கையாளர் மூலம் சான்றளிக்கப்பட்ட 3 வருட வருமான வரி கணக்கு அறிக்கைகள்

* ‘அட்வான்ஸ் டாக்ஸ் பேமெண்ட்’ செலுத்தி இருந்தால் அதற்கான ஜெராக்ஸ் நகல்கள்

* தொழில் வரி செலுத்தி வருவது பற்றிய சான்றுகள்

* பிற வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் அதன் விபரங்கள்

* மேற்கண்டவற்றோடு ‘பேங்க் ஸ்டேட்மெண்ட்’, குடும்ப அட்டை, தொலைபேசி கட்டண ரசீது, ‘இன்சூரன்ஸ்’ போன்ற இதர தகவல்களும் கேட்கப்படும்.
Tags:    

Similar News