லைஃப்ஸ்டைல்

பெண் குழந்தைகள் தந்தை மீது அதிக பாசம் வைக்க காரணம்

Published On 2017-07-28 08:19 GMT   |   Update On 2017-07-28 08:19 GMT
ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்து கொள்வதற்கான காரணத்தை பார்க்கலாம்.
தந்தை என்றால் பெண் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதே போல தான் ஒரு தந்தை தனது ஆண் குழந்தைகளை கவனித்துக்கொள்வதை காட்டிலும், பெண் குழந்தையை அதிக அக்கறை எடுத்து கவனித்துக்கொள்ள வேண்டும். அது ஏன் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...!

தனது தந்தையின் மீது தான் பெண் குழந்தை அதிக ஆர்வம் காட்டுவதாகவும், மனம்விட்டு பேச வேண்டும், தனது உணர்வுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும், சோகங்களை பகிர வேண்டும் என்ற எண்ணம் தாயை விட தந்தையிடம் இடம் தான் அதிகமாக இருக்கின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஆண்கள் தனது குழந்தையின் மனநிலையை புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.

ஒரு தந்தையால் ஆண் குழந்தைகளின் உள் உணர்வுளை புரிந்து கொள்வதை விட பெண் குழந்தைகளின் உள் உணர்வுகளை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. எனவே தனது குழந்தைக்கு வேண்டியதை செய்ய இவர்களால் முடியும்

என்ன தான் பெண் குழந்தைகள் தன் தாயுடன் நாள் முழுவதையும் கழித்தாலும் கூட, தன் தந்தையை கண்டவுடன் தந்தையிடம் ஒட்டிக்கொள்ளும். பெண் குழந்தைகளுக்கு தன் தந்தையுடன் நேரத்தை செலவழிப்பது மற்றும் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம்.

பெண் குழந்தைகளால் மற்றவர்களை காட்டிலும், தனது முகபாவனைகள் மற்றும் பேச்சு ஆகியவற்றை எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.

தாயை காட்டிலும் தந்தையால் தனது பெண் குழந்தைக்கு அதிக வெளியுலக அறிவை கொடுக்க முடியும். தந்தையுடன் செலவிடும் நேரங்களில் பெண் குழந்தைகள் அதிகமாக கற்றுக்கொள்ள முடிகிறது.

பெரும்பான்மையான குழந்தைகள் தங்களது தந்தையின் செல்லப்பிள்ளைகளாக இருப்பார்கள். தாயுடனான தந்தையின் அன்பு ஒரு குழந்தையின் மனநலம் மற்றும் உடல்நலத்தை பேணிக்காக்கிறது.
Tags:    

Similar News