லைஃப்ஸ்டைல்

அதிகமாக குறும்பு செய்யும் குழந்தையை அடக்குவது எப்படி?

Published On 2016-06-03 03:43 GMT   |   Update On 2016-06-03 03:43 GMT
குழந்தைகளை அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைக்காமல் ஆற அமர உட்கார வைத்து புரிய வைத்தால் அழகு பையனாகி விடுவான்.
உங்கள் குழந்தை அளவுக்கு அதிகமாக சேட்டை பண்ணுகிறதா? சொன்ன பேச்சை கேட்கமாட்டேன் என்கிறதா? சரியாக படிக்கவில்லையா? அடித்து வழிக்கு கொண்டுவர வேண்டும் என்று நினைக்காமல் ஆற அமர உட்கார வைத்து புரிய வைத்தால் அழகு பையனாகி விடுவான்.

* அக்கம் பக்கத்தில் உள்ள அமைதியான குழந்தைகளோடு உங்கள் குழந்தைகளையும் விளையாடவிடுங்கள்.

* மூளைக்கு வேலை தரும் விளையாட்டு பொருட்களை வாங்கித்தந்து விளையாடக் கற்றுக்கொடுங்கள்.

* வெண்டைக்காய், வெங்காயம், கேரட் ஆகியவற்றை அவ்வப்போது பச்சையாக உண்ணக் கொடுங்கள்.

* தினசரி கைகளை நீட்டுவது, கால்களை விரிப்பது, யோகாசனங்கள் போன்ற உடற்பயிற்சிகளை உடன் இருந்து சொல்லிக்கொடுங்கள்.

* சாமி கும்பிடுகிற வாக்கில் சுமார் 15 நிமிடங்கள் அமைதியாக... ஒரே இடத்தில் அமரச் செய்து... தியானம் செய்ய வைக்க முயலுங்கள்.

* ஒவ்வொரு நல்ல பழக்கமாக நிதானமாக கற்றுக்கொடுங்கள். அவசரப்படவேண்டாம்.

* உறவினர்கள், நண்பர்கள் மூலம் உங்கள் குழந்தைகளை கண்டிக்க சொல்லுங்கள், கட்டுப்படுவான்.

- மொத்தத்தில் மனரீதியாக கொஞ்சம் கொஞ்சமாக அவனை திருத்தப்பாருங்கள்! அதுவே அவன் திருந்துவதற்குரிய சரியான வழியாகும்.

Similar News