ஆசிரியர் தேர்வு

வரலட்சுமி நோன்பையொட்டி தருமபுரி மார்க்கெட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த தாழம்பூக்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பூக்களை காணலாம்.

வரலட்சுமி நோன்பையொட்டி தருமபுரியில் தாழம்பூ- பூஜை பொருட்கள் விற்பனை அமோகம்

Published On 2022-08-05 10:17 GMT   |   Update On 2022-08-05 10:17 GMT
  • வீடுகளை அலங்கரித்து, வாசலில் மாவிளை தோரணம் கட்டி அலங்கரித்தனர்.
  • பெண்களை வீட்டிற்கு அழைத்து மஞ்சள்,குங்குமம், பழம், தேங்காய் ஆகிய தாம்பூல பொருட்களையும் மற்றும் துணியையும் வழங்கி மகிழ்ந்தனர்.

தருமபுரி,

வரலட்சுமி பண்டி கையை, கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெண்கள் விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். தமிழ்நாட்டிலும் சில மாவட்டங்களில் வரலட்சுமி நோன்பு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுமங்கலிப்பெண்கள் சிறப்பாக கொண்டாடும் வரலட்சுமி நோன்பு இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, பெண்கள் விரதம் இருந்து பண்டிகையை கொண்டாடினார்கள்.

தருமபுரியில் வர லட்சுமி நோன்பு பண்டிகையையொட்டி, பெண்கள் வீடுகளை அலங்கரித்து, வாசலில் மாவிளை தோரணம் கட்டி அலங்கரித்தனர்.

தொடர்ந்து பூஜை அறையில் வரலட்சுமி அம்மனை அலங்கரித்து வைத்து, கலசம் வைத்தும் பூக்களால் அலங்கரித்தும், பூஜை பொருட்களை வைத்தும் வழிபாடு நடத்தினர்.

மேலும், சுமங்கலி பெண்களை வீட்டிற்கு அழைத்து மஞ்சள்,குங்குமம், பழம், தேங்காய் ஆகிய தாம்பூல பொருட்களையும் மற்றும் துணியையும் வழங்கி மகிழ்ந்தனர்.

வரலட்சுமி நோன்பையொட்டி தருமபுரி மார்க்கெட்டில் தாழம்பூக்கள் மற்றும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விற்பனை சூடு பிடித்தது.

Tags:    

Similar News