வழிபாடு

வைகுண்ட ஏகாதசி: திருப்பதியில் வருகிற 27-ந்தேதி ஆழ்வார் திருமஞ்சனம்

Published On 2022-12-23 04:39 GMT   |   Update On 2022-12-23 04:39 GMT
  • 5 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.
  • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2-ந் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. ஏழுமலையான் கோவிலில் சங்கராந்தி, தீபாவளி ஆஸ்தானம், பிரம்மோற்சவ விழா மற்றும் முக்கிய பண்டிகைகளின் போது கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியை ஒட்டி வரும் 27-ந் தேதி கோவிலை சுத்தம் செய்யும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதையொட்டி, அன்று காலை 6 மணி முதல் 10 மணி வரை மூலவர் மீது பட்டு துணியால் மூடப்படும்.

கருவறை, ஆனந்த நிலையம், கொடிமரம், யோக நரசிம்ம சாமி, வகுலமாதா, பாஷ்யகாரல சன்னதிகள், சம்பங்கி மண்டபம், ரங்கநாதர் மண்டபம், மகாதுவாரம் என அனைத்து இடங்களும் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெறும். பின்னர் பச்சை கற்பூரம், மஞ்சள், கிச்சலிகட்டை உட்பட பல்வேறு மூலிகை பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்ட கலவை கோவில் முழுவதும் தெளிக்கப்படும்.

கோவில் ஆழ்வார் திருமஞ்சனத்தையொட்டி, தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தப்பட உள்ளது. அன்று காலை 11 மணிக்கு பிறகு வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 5 மணிநேரம் தரிசனம் நிறுத்தப்படுகிறது.

திருப்பதியில் நேற்று 63,145 பேர் தரிசனம் செய்தனர். 22,411 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினார். ரூ.4.39 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

Tags:    

Similar News