வழிபாடு

வாரம் ஒரு தேவாரம்

Published On 2024-09-10 10:57 IST   |   Update On 2024-09-10 10:57:00 IST
  • தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம் என்று பெயர் பெற்றதாக கூறுவர்.
  • மெய்தவத்தின்முயல் வார்உயர்வானகம் எய்தும் புகலூரே.

சிவபெருமான் மீது பாடப்பெற்ற பன்னிரு திருமுறைகளில், முதல் 7 திருமுறைகளை தேவாரம் என்று அழைக்கிறோம்.

இதில் முதல் மூன்று திருமுறைகளை திருஞானசம்பந்தரும், நான்காம் திருமுறை முதல் ஆறாம் திருமுறை வரையான பாடல்களை திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையை சுந்தரமூர்த்தி சுவாமிகளும் பாடியிருக்கிறார்கள்.

தெய்வத்தின் மீது பாடப்பட்ட ஆரம் (பாமாலை) என்பதால் இது தேவாரம் என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர்.

இந்த தேவாரப் பாடலில் இருந்து ஒரு பாடலையும், அதற்கான விளக்கத்தையும் பார்க்கலாம்.

பாடல்:-

செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர்

செப்பில்பொருள் அல்லாக்

கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள்

கடவுள்ளிடம் போலும்

கொய்துபத்தர்மல ரும்புனலும்கொடு

தூவித்துதி செய்து

மெய்தவத்தின்முயல் வார்உயர்வானகம்

எய்தும் புகலூரே.

- திருஞானசம்பந்தர்

விளக்கம்:-

சாக்கியர், சமணர் ஆகியோர்களின் உண்மையில்லாத வஞ்சகம் நிறைந்த மொழிகளை கேளாதவராய், மிகுதியான தவத்தை செய்யும் அடியார்களின் தலைவராகிய சிவபெருமானுக்கு உகந்த இடமானது, அடியார்கள் மலர் கொய்து வந்து துதிப்பாடி, தவநெறியில் முயன்று உயர் வானகத்தை அடைவதற்குரிய வழிபாடுகளை செய்யும் புகலூர் ஆகும்.

Tags:    

Similar News