வழிபாடு
நவம்பர் மாதம் ஏழுமலையானை தரிசிக்க முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டிக்கெட் இன்று வெளியீடு
- பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
- இன்று மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகிறது.
திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அடுத்த மாதம் (நவம்பர்) திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணியளவில் வெளியிடப்படுகிறது.
எனவே பக்தர்கள் முன்பதிவு செய்து குறிப்பிட்ட தேதியில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.