வழிபாடு

திருப்பதி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ விழா: இன்று அங்குரார்ப்பணம்

Published On 2023-03-19 07:32 GMT   |   Update On 2023-03-19 07:32 GMT
  • பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று அங்குரார்ப்பணம் நடக்கிறது.
  • நாளை காலை 8.45 மணியில் இருந்து 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை சேனாதிபதி உற்சவம், மேதினி பூஜை, மிருதங்கரஹணம், அங்குரார்ப்பணம் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து நாளை காலை 8.45 மணியில் இருந்து காலை 9.32 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதன் பிறகு வாகனச் சேவை நடக்கிறது. வாகனச் சேவை தினமும் காலை 8 மணியில் இருந்து காலை 9.30 மணி வரையிலும், இரவு 7 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரையிலும் நடக்கிறது.

வாகனங்களில் உற்சவர் கோதண்டராமர் தனித்தும், சீதா, லட்சுமணன், ஆஞ்சநேயருடன் இணைந்தும் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News