வழிபாடு

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் பத்ர புஷ்ப யாக மகோற்சவம் நாளை நடக்கிறது

Published On 2023-05-04 06:17 GMT   |   Update On 2023-05-04 06:17 GMT
  • இன்று மாலை அங்குரார்ப்பணம், நவ கலச ஸ்தாபனம் நடக்கிறது.
  • நாளை கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடக்கிறது.

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) பத்ர புஷ்ப யாக மகோற்சவம் நடக்கிறது. அதையொட்டி இன்று (வியாழக்கிழமை) மாலை சாஸ்திரமுறைப்படி விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவச்சனம், அங்குரார்ப்பணம், நவ கலச ஸ்தாபனம் நடக்கிறது.

நாளை காலை 7.30 மணியில் இருந்து காலை 9.30 மணி வரை உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு நவ கலச ஸ்நாபன திருமஞ்சனமும் மற்றும் மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு, இளநீர், விபூதி ஆகியவற்றால் ஸ்நாபன திருமஞ்சனமும் நடக்கிறது.

அதைத்தொடர்ந்து காலை 10 மணியில் இருந்து மதியம் 12 மணி வரை பத்ர புஷ்ப யாக மகோற்சவம் கோலாகலமாக நடக்கிறது. உற்சவர்களான கபிலேஸ்வரர், காமாட்சி தாயாருக்கு மல்லி, ஜாதி மல்லி, சாமந்தி, சம்பங்கி, ரோஜா, தாமரை, கனகாம்பரம் உள்பட பல்வேறு மலர்களாலும், வில்வம், துளசி, பன்னீர் இலைகளாலும் பத்ர புஷ்ப யாக மகோற்சவம் நடக்கிறது.

இந்தப் பத்ர புஷ்ப யாக மகோற்சவம் கோவிலில் அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் தெரிந்தும், தெரியாமலும் ெசய்கின்ற தவறுகளால் ஏற்படுகின்ற தோஷ நிவர்த்திக்காக நடத்தப்படுவதாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News