வழிபாடு

ஐப்பசி திருவிழா: திருவட்டார் ஆதிகேசவ பெருமாளுக்கு ஆராட்டு

Published On 2022-11-02 06:42 GMT   |   Update On 2022-11-02 06:42 GMT
  • ஆதிகேசவ பெருமாளுக்கு தளியல் ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது.
  • திருவம்பாடி கிருஷ்ணசுவாமி கருட வாகனத்தில் ஆராட்டுக்கு எழுந்தருளினர்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஐப்பசித் திருவிழா கடந்த 23-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சாமிபவனி, கதகளி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் சிறப்பு நாதஸ்வரக்கச்சேரி, சாமி கருட வாகனத்தில் பள்ளிவேட்டைக்கு எழுந்தருளல் ஆகியன நடந்தது.

விழாவின் 10-வது நாளான நேற்று ராமாயண பாராயணம், சிறப்பு நாதஸ்வர கச்சேரி போன்றவை நடந்தது. இரவு கருட வாகனத்தில் ஆதிகேசவ பெருமாளும் திருவம்பாடி கிருஷ்ணசுவாமியும் கருட வாகனத்தில் ஆராட்டுக்கு எழுந்தருளினர்.

அப்போது திருவிதாங்கூர் மன்னரின் பிரதிநிதி உடைவாளுடன் முன் சென்றார். திருவட்டார் போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செய்தனர். பின்னர் ஆதிகேசவ பெருமாளுக்கு தளியல் ஆற்றில் ஆராட்டு நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News